தேசிய விளையாட்டு - இந்திய தேசிய சின்னங்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்ற வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும்.
இந்த விளையாட்டின் ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.
பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.
இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள் ஆகும்.
விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர் ஆவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய விளையாட்டு - National Sports - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, விளையாட்டு, india, சின்னங்கள், national, இரண்டு, அரசாங்கம், நிமிடம், கிராம், வேண்டும், பகுதி, | , பேர், அகலம், ஆட்டக்காரர்கள், விளையாட்டாகும், symbols, sports, government, ஆகும், விளையாடும், வீரர்கள், கெஜம்