கலைச்சொற்கள்
கலைச்சொற்கள் என்பது, ஏதாவது ஒரு துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். கலைச்சொல் என்பது சொற்சிக்கனத்தோடு, பொருளில் ஆழத்தையும், துல்லியத்தன்மையையும் பெறுவதற்கான ஒரு வழிமுறையும் ஆகும். இவை பொது வழக்கில் உள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியது இல்லை.
ஒரு குறிப்பிட்ட துறை குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச் சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதித்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. இதனால், ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத் துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.
- ஆட்சியியல் (Administration)
- அரசியல் (Politics)
- இயற்பியல் (Physics)
- உயிரியல் (Biology)
- உளவியல் (Psychology)
- கணிதவியல் (Mathematics)
- கல்வெட்டியல் (Epigraphy)
- கால்நடைவளம் (Vetenary Science)
- கானியல் (Forestry)
- சட்டவியல் (Law)
- சமூகவியல் (Sociology)
- சூழலியல் (Environmental Science)
- தகவல் தொழில்நுட்பவியல் (Information Technology)
- நாட்டுப்புறவியல் (Folk lore)
- புவியியல் (Geology)
- புள்ளியியல் (Statistics)
- பொருளியல் (Economics)
- பொறியியல் தொழில்நுட்பம் (Engineering and Technology)
- மருத்துவவியல் (Medicine)
- மனையியல் (Home Science)
- மானிடவியல் (Anthropology)
- மீன்வளம் (Fisheries)
- மீனினப் பெயர்கள் (Names of the Fish Variety)
- மெய்யியல் (Philosophy)
- மேலாண்மையியல் (Management)
- மொழியியல் (Linguistics)
- வங்கியல் (Banking)
- வணிகவியல் (Commerce)
- வரலாறு (History)
- வானியல் (Astronomy)
- விலங்கினப் பெயர்கள் (Names of the Animal Variety)
- வேதியியல் (Chemistry)
- வேளாண்மையியல் (Agriculture)
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலைச்சொற்கள், Technical Glossary