தேசிய சின்னம் - இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய சின்னம் சாரநாத்தில் உள்ள அசோகத் தூண்ணில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரம் ஆகும். இதில் நான்கு முகச் சிங்கமும், சீறிப்பாயும் குதிரைகளும், காளையும் பொறிக்கப்பட்டுள்ள்ன. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள்கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட எழுத்துக்கள் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. ‘சத்யமேவ ஜயதே' என்னும் வாக்கியம் முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேசிய சின்னமாக 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் நாள் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத் தேசிய சின்னத்தினை அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தை பயன்படுத்த வேண்டும். தேசிய சின்னங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இந்திய தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய சின்னம் - National Emblem - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, சின்னம், வண்ணத்திலும், சின்னங்கள், india, national, வேண்டும், அரசாங்கம், சிவப்பு, உறுப்பினர்கள், | , government, emblem, symbols, என்னும், பயன்படுத்தும், எழுதுதாள்களில்