5. பெருத்த வசன வகுப்பு - திருவகுப்பு
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் |
1 |
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் |
2 |
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் |
3 |
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை யடக்கி யவநெறி கடக்க விடுவதும் |
4 |
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும் |
5 |
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் |
6 |
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி தெதிரென இணைக்க அரியதும் |
7 |
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் |
8 |
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் |
9 |
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் |
10 |
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் |
11 |
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் |
12 |
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் |
13 |
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் |
14 |
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர் ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை |
15 |
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே. |
16 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. பெருத்த வசன வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யருள்வதும், விடுவதும், கடக்க