6. பூத வேதாள வகுப்பு - திருவகுப்பு
அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள் |
1 |
அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி |
2 |
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி |
3 |
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி |
4 |
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி |
5 |
ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர் ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் |
6 |
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி |
7 |
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் |
8 |
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் |
9 |
ஆசிலா சார தபோதன ரின்புறும் வாசகா தீத மனோலய பஞ்சரன் |
10 |
அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித |
11 |
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி |
12 |
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் |
13 |
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் |
14 |
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் |
15 |
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் |
16 |
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் |
17 |
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில் அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் |
18 |
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் |
19 |
ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை |
20 |
வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை மொழியினன் |
21 |
மதுக ராரவ மந்திர சிந்துர மணம றாத கடம்பு புனைந்தவன் |
22 |
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை |
23 |
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் |
24 |
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் |
25 |
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய |
26 |
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் |
27 |
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன் உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் |
28 |
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் |
29 |
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் |
30 |
வரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதரன் |
31 |
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன் |
32 |
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் |
33 |
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் |
34 |
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் |
35 |
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் |
36 |
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் |
37 |
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் |
38 |
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு |
39 |
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தனில் |
40 |
(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை) |
|
உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர அசைய வருவன |
41 |
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட நடைவி நோதவி தம்புரி பந்திய |
42 |
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன |
43 |
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன |
44 |
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன |
45 |
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ |
46 |
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில் உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன |
47 |
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில் உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன |
48 |
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல் உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன |
49 |
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும் ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ |
50 |
உடலி னிசிசரர் மவுலி ஒலியலும் உதடு மலைவன பதடி முலையின |
51 |
உததி யேழும டங்கவு றிஞ்சியும் உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ |
52 |
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும் ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன |
53 |
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன |
54 |
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன |
55 |
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன |
56 |
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன |
57 |
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன |
58 |
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன |
59 |
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி ஓதுசா மீகர நேமி பிடுங்குவ |
60 |
கரணம் இடுவன குணலை யிடுவன கழையை நடுவன பவுரி வருவன |
61 |
ககன கூடமு டைந்துவி ழும்படி கதறி வாயனல் கண்கனல் சிந்துவ |
62 |
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக |
63 |
கண்டச் சம்பதிப் பேத மாம்பல கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி |
64 |
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன |
65 |
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ |
66 |
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன |
67 |
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின |
68 |
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ |
69 |
காலமா றாத வராளிசி கண்டிகை பாலசீ காமர மானவி பஞ்சிகை |
70 |
கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி யிசைவன |
71 |
கனவ ராடிய ரும்பட மஞ்சரி தனத னாசிவி தம்படு பஞ்சமி |
72 |
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில் உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன |
73 |
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ |
74 |
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை மத்தளி கொட்டிய முற்றும டிப்பன |
75 |
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி |
76 |
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன |
77 |
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன |
78 |
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய |
79 |
காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே. |
80 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. பூத வேதாள வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - முற்று, வெளுக்க, லக்ஷண, கட்டுவன, டிப்பன, மஞ்சரி, வருவன, தப்புவன, அநுபவ