4. திருவேளைக்காரன் வகுப்பு - திருவகுப்பு
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் |
1 |
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் |
2 |
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் |
3 |
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் |
4 |
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் |
5 |
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் |
6 |
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் |
7 |
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் |
8 |
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் |
9 |
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும் |
10 |
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் |
11 |
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் |
12 |
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் |
13 |
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும் யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் |
14 |
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும் யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் |
15 |
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் |
16 |
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர் வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் |
17 |
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு மானும்அய னைக்கறுவு கோபக் காரனும் |
18 |
வாழியென நித்தமற வாதுபர விற்சரண வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் |
19 |
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய் மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் |
20 |
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் |
21 |
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் |
22 |
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும் வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் |
23 |
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் |
24 |
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் |
25 |
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் |
26 |
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ வேலையுற விட்டதனி வேலைக் காரனும் |
27 |
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர் வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் |
28 |
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல் வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் |
29 |
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் |
30 |
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி யாகுலம னத்தினொடு போம்விற் காரனும் |
31 |
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. |
32 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. திருவேளைக்காரன் வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காரனும்