11. திருக்கையில் வழக்க வகுப்பு - திருவகுப்பு
தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன, |
தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன, |
சதுர்த்தச தலத்தையும் எடுத்தக டவுட்பணி சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன, |
சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன, தரத்தன, தலைச்சுர, நதிப்புனல் குளிப்பன; |
அருக்கர் பதம்உட்பட மிதித்திடு பதத்தன; அறப்படு கொலைத்தொழில் புறப்படு முகத்தன; |
அரக்கர்ப டைகெட்டுமு றியப்பொரு பதத்தன; அயற்கும் அமரர்க்கும்ஒ ருபொற்பதி யளிப்பன; |
அளித்தவ முதுக்கவள மொக்குவன; முத்தெறி அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ; |
அடித்தெழு பொருப்பினை நெருப்பெழ விழிப்பன அதிக்ரம கமப்ரவுட விக்ரம மதத்தன; |
மருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன; வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன; |
மதிப்பிள வெனச்செருகி வைத்தென மணிச்சதுர் மருப்பின; இமைப்பற விழித்த நயனத்தன; |
வளைத்த கிரியைப் பொடிபடுத்தி இபம்எட்டையு மலைத்தவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன; |
மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன; மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன; |
திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி திருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை |
செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல் சிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள் |
செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு திருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள் |
திருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர் சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. திருக்கையில் வழக்க வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பதத்தன, அதிர்ப்பன