10. திருஞான வேழ வகுப்பு - திருவகுப்பு
சடலை பட்டலை உடல் எனப்படு தரும சித்திர கூட மானவை |
தவிர நிட்கள வெளியில் நிற்பன சமய தர்க்கவி ரோத வாதிகள் |
தகர எற்றுவ புகர்ம னக்கிரி தனைமு ருக்குவ, ஆசை ஆணவ |
தளைஇ யற்கையை விடந டிப்பன சனன முற்றிய சாத மாம்எழு |
கடல்க டப்பன, படுகொ லைச்சமர் கடகம் அப்படி சாய மோதுவ |
கருவி னைத்தரும் இருவினைத்தொடர் கழல்ப தத்தன, யோக சாதகர் |
களைப றிப்பன, கிளைஎ னப்படு கவலை சுற்றிய காடு சாடுவ, |
கருணை மெய்த்தவ திருவ ருட்கன கவள மொக்குவ, காம ராசனை |
அடல்கெ டுப்பன, அகில கற்பனை அரண் அழிப்பன, கோப மானவை |
அவிய நற்பொறை எனுந திப்பிர ளயம் இறைப்பன, லோப மோகிதம் |
அவைமு றிப்பன, மதமு ழுத்தறி யடிப றிப்பன, ராச தாதியின் |
அதிகு ணத்ரய மதில் இடிப்பன, அளவில் தத்துவ தூளி வீசுவ; |
திடமு டைச்சிறை மயில் உகைத்தெழு சிகரி குத்திய வேலை நீள்சுனை |
தினமும் உற்பல மலர்தி ருத்தணி இறைதி ருப்புகழ் பாடு நாவலர் |
திரள்ப்ரி யப்பட இனித ளிப்பன செயலொ ழித்தநு பூதி மீமிசை |
திகழும் அற்புத மவுன நிர்க்குண சிவம யத்திரு ஞான வேழமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
10. திருஞான வேழ வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - றிப்பன, மானவை