கைரேகைகள் - கைரேகை சாஸ்திரம்
கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். கைரேகை கலையை ஆங்கிலத்தில் “Palmistry” (பாமிஸ்டிரி) என அழைக்கிறார்கள். “Palmistry” என்னும் வார்த்தையில் Palm, Mastery என இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. Palm என்றால் உள்ளங்கை எனப்பொருள்படும். Mastery என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே Palmistry என்றால் உள்ளங்கை பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.
கை ரேகை கலையை சமஸ்கிருதத்தில் "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக்குறிப்பிடுகிறார்கள்."ஹஸ்தம்" என்றால் கை என்று பொருள்."ரேகா" என்றால் "கோடு" என்று பொருள்."சாஸ்திரம்" என்றால் "அறிவியல்" என்று பொருள்.எனவே "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால் கையிலுள்ள கோடுகளைப்பற்றிய அறிவியல் எனப்பொருள்படும்.
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்ற னர். ஆனால் ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையு ம், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப்போ கிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன் களையும், இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக்கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக்கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இடக்கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைரேகைகள் - கைரேகை சாஸ்திரம், ரேகை, என்றால், சாஸ்திரம், கைரேகை, வேண்டும், இடக்கை, வலக்கை, ரேகையையும், பார்த்து, பெண்களுக்கு, வயதிற்கு, இருந்தால், பலனும், பங்கு, ஆண்களுக்கு, ரேகையையைப், எனப்பொருள்படும், உள்ள, palm, பிறகு, இரண்டு, கைரேகைகள், பொருள், மேடுகளும், ரேகைகளும், ஜோதிடம், ரேகா, இருக்க, நல்ல, உண்டாகும், ரேகைகள், “palmistry”, பலவீனமாக, உள்ளங்கை, பலமாக, நடந்த, கலையை, ஹஸ்த, அறிவியல், palmistry, mastery, முன்னால், ஞானம், பலன்களையும்