நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.099.திருவையாறு

4.099.திருவையாறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
954 | அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய |
4.099.1 |
வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த, நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய், மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ?
955 | பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் ஆடகக் காலரி மாறேர வல்லனை |
4.099.2 |
பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.099.திருவையாறு , திருவடிகள், அணிந்த, திருமுறை, திருவையாறு, திருவடி, நான்காம், மாலையிலே, தேவாரப், திருச்சிற்றம்பலம், பதிகங்கள்