நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.098.திருநல்லூர்

4.098.திருநல்லூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
943 | அட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் |
4.098.1 |
ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய், நிலையாக நடனமாடும் தலைவராய், நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் 'உணவுக்குரிய பிச்சையிடுமின்' என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ?
944 | பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல் பண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு |
4.098.2 |
நீலகண்டப் பெருமானார், பெண்கள் ஆசைப்படும் படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப்பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கிநின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு.
945 | படவே ரரவல்குற் பாவைநல் லீர்பக இடுவா ரிடைப்பலி கொள்பவா போலவந் நடவா ரடிக ணடம்பயின் றாடிய வடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் |
4.098.3 |
படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல்குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார். அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும்.
946 | செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் நஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் |
4.098.4 |
சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும், நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான்.
947 | வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் நண்ணில யத்தொடு பாடல றாதநல் திண்னில யங்கொண்டு நின்றான் றிரிபுர கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் |
4.098.5 |
வெண்பிறை சூடி உலகு விளங்கு நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல் கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன.
948 | தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் |
4.098.6 |
எல்லார் உள்ளத்தும் தௌவு ஏற்படச் சிவபெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய், தம் பொருத்தமல்லாத புத்தியினால், ஆற்றில் இழந்த பொருளைக்குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல, எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர்.
949 | நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் |
4.098.7 |
காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சுனையாக அதனை மறைத்து, ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள்.
950 | 950,அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி நறைமல்கு கொன்றையந் தாருடை யானுநல் பறைமல்கு பாடல னாடல னாகிப் பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய |
4.098.8 |
பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய, தலைக்கோலத்தை உடைய பெருமான், ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று, அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான்.
951 | மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த துன்னிய தொண்டர்க ளின்னிசை பாடித் கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய அன்னிய ரற்றவ ரங்கண னேயரு |
4.098.9 |
நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க, எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ, நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு, பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர்.
952 | திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் மருவமர் நீள்கொடி மாட மலிமறை உருவமர் பாகத் துமையவள் பாகனை |
4.098.10 |
திருமகள் தங்கும் தாமரை, சிறப்பு வளரும் செங்கழுநீர், பறித்துச் சூடும் நெய்தல், நிறம் பொருந்திய கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி, நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக.
953 | செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் வல்லேன் புகவு மதில்சூ ழிலங்கையர் கல்லார் முடியொடு தோளிறச் செற்ற நல்லூ ரிருந்த பிரானல்ல னோநம்மை |
4.098.11 |
இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புக வல்லேன் அடியேன். மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதியுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடி களை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.098.திருநல்லூர் , உடைய, நல்லூரில், கண்டு, வந்து, கொண்டு, பாடல, கொண்ட, அழகிய, திருமுறை, பொருந்திய, உள்ள, அவன், திருநல்லூர், சூடி, அடியேனுடைய, காட்சி, தாமரைப், உடையவனாய், தாமரை, நின்று, நல்லூரிலே, சூழப்பட்ட, அடியேன், சென்று, பிச்சை, திருச்சிற்றம்பலம், நிலையாக, பதிகங்கள், தேவாரப், நான்காம், பெருமான், தேன், ஆடிய, சிவந்த, கூடிய, பெருமானார், காரணம், உறையும்