நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.096.திருவீழிமிழலை

4.096.திருவீழிமிழலை
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
923 | வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் நான்சட்ட வும்மை மறக்கினு மென்னைக் |
4.096.1 |
வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று, அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே! பெண்மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர்! பளிங்குமணி போன்ற தௌந்த நீரை உடைய வீழிமிழலையில் உள்ள செம்மையீர்! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள்.
924 | அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத் உந்திடும் போது மறக்கினு மென்னைக் |
4.096.2 |
ஆதியும் அந்தமுமாக உள்ளவரே! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.
925 | அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற் குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் |
4.096.3 |
அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே! மான்கன்று பொருந்திய கையை உடையவரே! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும்.
926 | தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக் |
4.096.4 |
தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே! பேய்களைத் தன் விருப்பப் படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின்.
927 | தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும் மேற்பட்ட வந்தணர் வீழியு மென்மையும் நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் |
4.096.5 |
தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும், தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர்! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.
928 | கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி பண்டியிற் பட்ட பரிகலந் தீர்பதி உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக் |
4.096.6 |
உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண்கலமாக உடையவரே! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! உணவு உண்ட போதும், உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும், உறங்கும்போதும், ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
929 | தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால் கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக் |
4.096.7 |
இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே! தூய வெள்ளிய காளையை வானகமாகக் கொண்டவரே! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக்கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.
930 | சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள் சுழிப்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் |
4.096.8 |
நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே! வீழிமிழலையில் உள்ளவரே! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
931 | பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர் விரிநீர் நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க கொள்ளையிற் பட்டு மறக்கினு மென்னைக் |
4.096.9 |
இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே! வேதம் ஓதவல்லவரே! வெள்ளிய நீற்றை அணிந்தவரே! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக்கொண்மின்.
932 | கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் |
4.096.10 |
மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.096.திருவீழிமிழலை , மென்னைக்குறிக்கொண்மினே, அடியேன், மறக்கினு, மறந்தாலும், உம்மை, உள்ளவரே, குறிக்கொண்மின், நும்மை, அடியேனைக், என்னைக், அணிந்தவரே, கொண்டு, மனத்தில், கொண்டவரே, திருமுறை, பட்ட, மிழலையில், உடையவரே, போதும், திருவீழிமிழலை, அகப்பட்டு, உடைய, வீழி, கயிலையைப், தேவாரப், அந்தணர்கள், நான்காம், பட்டு, கையில், இருப்பிடமாகக், வீழிமிழலையை, கண்டு, வெள்ளிய, முடியில், இறுதிக், மிழலையுள், போது, திருச்சிற்றம்பலம், சொட்டநின், ஒழுக, வீழிமிழலையில், நின்று, காளையை, அடியேனை, கொன்றை, காலத்தில், கைகளும், பொருந்திய, நீர், வேண்டும், பதிகங்கள், அழித்தவரே