நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.095.திருப்பாதிரிப்புலியூர்
4.095.திருப்பாதிரிப்புலியூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்.
தேவியார் - தோகையம்பிகையம்மை.
913 | ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி |
4.095.1 |
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த, சகோதர சகோதரியாராய் அமைந்து, மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான்.
914 | பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன |
4.095.2 |
நெஞ்சே! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன். ஆதலின், அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக. நினைந்திடு எப்போதும் - பாடம்.
915 | விடையான் விரும்பியென் னுள்ளத் திருத்தா கடையா வவல மருவினை சாரா புடையார் கமலத் தயன்போல் பவர்பா உடையா னடிய ரடியடி யோங்கட் |
4.095.3 |
காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான். இனி நம்பக்கம் துயரங்கள்அடையா. தீவினைகள் நெருங்கா. கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்சமாட்டோம். பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ?
916 | மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க நேயநிலாவ விருந்தா னவன்றன் தேயமெல் லாநின் றிறைஞ்சுந் மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு |
4.095.4 |
மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித்தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆவணம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன.
917 | வைத்த பொருணமக் காமென்று சொல்லி சித்த மொருக்கிச் சிவாய நமவென் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் |
4.095.5 |
மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது, செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ?
918 | கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று தருவாய் சிவகதி நீபா திரிப்புலி |
4.095.6 |
திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன். கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன். வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப்பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக.
919 | எண்ணா தமர ரிரக்கப் பரவையு திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி |
4.095.7 |
முதலில் உன்னைத் தியானிக்காமல், கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய். வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன.
920 | புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த |
4.095.8 |
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.
921 | மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா `கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான |
4.095.9 |
நெஞ்சே! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே. திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திரவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம்.
922 | திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் |
4.095.10 |
மலையைப் பெயர்க்க முற்பட்ட, நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே! திருப்பாதிரிப்புலியூரில் உறைபவனே! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி, இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன். இனி, அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.095.திருப்பாதிரிப்புலியூர் , அடியேன், திருப்பாதிரிப்புலியூரில், உடைய, நமக்கு, திருமுறை, பெருமானுடைய, திருவடிகள், சிவாய, இப்பொழுது, உறையும், திருப்பாதிரிப்புலியூர், அருள், செய்ய, மனம், இல்லாத, மனத்தை, பெருமானே, அடியவர்களுக்கு, தோன்றிய, திருவைந்தெழுத்தை, புலியூரில், அடியேனுக்கு, எப்பொழுதும், கன்பன், பெருமான், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், நெஞ்சே, முழுதும், நமக்குப், உள்ளத்தில், ஆதலின், செறிந்த, கடல், திருப்பாதிரிப்புலியூர்ப்