நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.094.திருக்கண்டியூர்

4.094.திருக்கண்டியூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
903 | வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் தானவர் மால்பிர மன்னறி யாத ஆனவ னாதிபு ராணனன் றோடிய கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் |
4.094.1 |
தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகியவனாய், காளைவாகனனாய், மூலப் பழம்பொருளாய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள். கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு.
904 | வான மதியமும் வாளர வும்புன தான மதுவென வைத்துழல் வான்றழல் கான மறியொன்று கையுடை யான்கண்டி ஊனமில் வேத முடையனை நாமடி |
4.094.2 |
வானத்தில் இயங்கவேண்டிய பிறை, ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய், தீ நிறத்தினனாய், காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும், குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக.
905 | பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் உண்டங் கறுத்தது மூரொடு நாடவை கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் |
4.094.3 |
பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய், விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும். அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள்.
906 | முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட |
4.094.4 |
அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் அப்பெருமான் தன்பால் உடையான். கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய், அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர். மேலுலகத்தேவர்கள் அடையவில்லை.
907 | பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன கற்றங் குடையவன் றானறி யான்கண்டி குற்றமில் வேத முடையானை யாமண்டர் |
4.094.5 |
ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய், பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய், முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
908 | போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் |
4.094.6 |
யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய், உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய், வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
909 | அட்டது காலனை யாய்ந்தது வேதமா சுட்டது காமனைக் கண்ணத னாலே கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் |
4.094.7 |
கூற்றுவனை அழித்து, வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து, மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு, தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்.
910 | அட்டு மொலிநீ ரணிமதி யும்மல இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை கட்டு மரவது தானுடை யான்கண்டி கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் |
4.094.8 |
உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய், இண்டைமாலையையும், கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும், பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
911 | மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் |
4.094.9 |
மன்மதனை வெகுண்டு அழித்த பிரான், கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான், ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான். அதனால் தீவினைகள் மறைந்தன; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன. தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன.
912 | மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் தண்டி யமரர் கடைந்த கடல்விடங் உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட |
4.094.10 |
தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய், அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.094.திருக்கண்டியூர் , கண்டியூரில், தேவர்கள், உடைய, போற்றுகின்றார்கள், யாமண்டர்கூறுவதே, உகந்தருளியிருக்கும், திருக்கண்டியூர், உள்ள, திருமுறை, தலைவனாய்க், உரித்த, அணிந்தவனாய், கொண்ட, அல்லனோ, நோய்கள், கடைந்த, பிரான், பிரானல்ல, பெருமானைத், தீவினை, பெருமான், விடத்தை, வாணர்தொழுகின்றதே, தேவர்களும், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், முடியாத, காட்டில், உடையவனாய், கழுத்தில், அவன், கையில், கையுடை, வாழும், அதனால்