நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.093.திருவையாறு

4.093.திருவையாறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
893 | மலையார் மடந்தை மனத்தன வானோர் நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற |
4.093.1 |
தேவருலகத்தை வழங்கும், அலையோடு கூடிய நீரை உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின் மனத்தனவாய், தேவர்களின் முடிகள் விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தி யிருப்பனவாய், வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய், இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய பிறவியைப் போக்குவன ஆகும்.
894 | பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் அலம்புந் திருவடி காண்கவை யாற |
4.093.2 |
ஐயாறன் அடித்தலங்கள் அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய், தம்மை வழிபடுபவர் தனித்து வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய், பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின் சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும்.
895 | உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன கற்றார் பரவப் பெருமை யுடையன கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற |
4.093.3 |
ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய், சிவாகமங்களை ஓதி அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய், தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம்.
896 | வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன ஆனை யுரித்தன காண்கவை யாற |
4.093.4 |
ஐயாறன் அடித்தலங்கள் தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய், மந்திரங்களால் வழிபடுகின்றவர்களுடைய பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய், மேம்பட்ட சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய், பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத் தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன.
897 | மாதிர மானில மாவன வானவர் மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின தூதரை யோடத் துரப்பன துன்பறத் காதர மாவன காண்கவை யாற |
4.093.5 |
ஐயாறன் அடித்தலங்கள் வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய், மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும் கட்டப்பட்டன வாய், கொடிய தருமராசரின் தூதர்களை ஓடச் செய்வனவாய், உலகத் துன்பங்கள் தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன.
898 | பேணித் தொழுமவர் பொன்னுல காளப் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை மாணிக்க மொத்து மரகதம் போன்று ஆணிக் கனகமு மொக்குமை யாற |
4.093.6 |
ஐயாறன் அடித்தலங்கள், விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து, தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம், மரகதம், வைரம், தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம்.
899 | ஓதிய ஞானமும் ஞானப் பொருளு வேதியர் வேதமும் வேள்வியு மாவன சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன டாதியு மந்தமு மானவை யாற |
4.093.7 |
ஆதியும், அந்தமும் ஆகிய ஐயாறன் அடித்தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும், ஞானப் பொருளாகிய பரஞானமும், ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும் வேதமும், வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன.
900 | சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் தணங்கு மரவிந்த மொக்குமை யாற |
4.093.8 |
ஐயாறன் அடித்தலங்கள் தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால் அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன. காந்தட்பூ - பார்வதிகைகள், தாமரை - பெருமான் திருவடிகள்.
901 | சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி கழலா வினைகள் கழற்றுவ கால அழலா ரொளியன காண்கவை யாற |
4.093.9 |
ஐயாறன் அடித்தலங்கள் கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும் செயலைப் போக்கி, விடுத்து நீங்காத வினைகளை அப்புறப்படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியை உடையன.
902 | வலியான் றலைபத்தும் வாய்விட்டலற மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் அலியா நிலைநிற்கு மையனை யாற |
4.093.10 |
நம் தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு மலையால் அவனை அழுத்தி, குறையாக வலிமையை உடைய கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள் முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.093.திருவையாறு , யாறனடித்தலமே, ஐயாறன், அடித்தலங்கள், உடைய, மேம்பட்ட, காண்கவை, பொழுதும், திருமுறை, திருவையாறு, ஞானமும், மாவன, தேவர்கள், வாய், மரகதம், மொக்குமை, ஒளியை, நீங்காத, வலிமையை, நிலைக்கு, செய்யும், திருவடிகள், வேதமும், பெருமான், போதும், ஞானப், பொன், வழங்கும், கூடிய, பார்வதியின், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், தேவர்களின், மதிக்கப்படுவனவாய், பொருளாய், போக்கி, பெருமை, துணையாவனவாய், தம்மை, தனித்து, பார்வதி