நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.088.திருப்பூந்துருத்தி

4.088.திருப்பூந்துருத்தி
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்.
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
843 | மாலினை மாலுற நின்றான் மலைமக பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் ஆலனை யாதிபு ராணனை நாமடி |
4.088.1 |
திருமாலுக்கு அடியைக் காணமுடியாத மயக்கம் ஏற்படும்படி தீத்தம்பமாக நின்றவனாய், பார்வதி பாகனாய், வெள்ளிய பிறை சூடியாய், பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது என்ற பண்பினை உணராத திரிபுர அசுரர்களின் மதில்களை வெற்றி கொண்டு அழித்தவனாய், போரிடும் காளையை ஊர்பவனாய்ப் பூந்துருத்தியுள் உறைபவனாய், கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தொன் மூதாளனுடைய திருவடிகளை நாம் வணங்குகிறோம்.
844 | மறியுடை யான்மழு வாளினன் மாமலை குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் அறிவுடை யாதிபு ராணனை நாமடி |
4.088.2 |
மான் கன்று, மழுப்படை எனும் இவற்றை ஏந்திப் பார்வதி பாகனாய், தன் பண்புகளைப் பிறர் உள்ளவாறு அறிய இயலாதவனாய்ப் புள்ளிகளை உடைய ஒளிபொருந்திய பாம்பினை அணிபவன் என்று எல்லோராலும் கூறப்படுபவனாய்ப் பூந்துருத்தியுள் உகந்தருளியிருக்கும் ஞானவடிவினனாகிய தொன் மூதாளனை நாம் திருவடிக்கண் பணிந்து வணங்குகிறோம்.
845 | மறுத்தவர் மும்மதின் மாயவொர் வெஞ்சிலை அறுத்தனை யாலதன் கீழனை யால்விட பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் நிறத்தனை நீல மிடற்றனை யானடி |
4.088.3 |
தெய்வ நம்பிக்கை கொள்ள மறுத்த அசுரர்களின் மும்மதில்களும் அழியுமாறு ஒருகொடிய சிலையில் ஓர் அம்பினைக் கோத்து அழித்தவனாய், கல்லால மரத்தடியில் அமர்ந்தவனாய், ஆல காலவிடத்தை உண்டு, அதனைக் கழுத்தில் தங்க வைத்தவனாய், பூதப்படை உடையவனாய், பூந்துருத்தியில் உகந்தருளியிருக்கும் செந்நிறத்து நீலகண்டனாகிய பெருமானை அடியேன் திருவடிக்கண் பணிந்து வணங்குகின்றேன்.
846 | உருவினை யூழி முதல்வனை யோதி திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் கருவினைக் கண்மூன் றுடையனை யானடி |
4.088.4 |
ஞானவடிவினனாய், எல்லா ஊழிகளையும் படைத்த முதல்வனாய், வேதங்களை ஓதி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் செல்வனாய், உலகங்களை எல்லாம் படைத்தவனாய், தன்னைப் பற்றுக்கோடாய் வந்து அடைந்த அடியேனை மோதுகின்ற வினைகளை எல்லாம் விரட்டியவனாய், பூந்துருத்தி நகரில் உறையும் உலக காரணனாய், முக்கண்ணனாய் உள்ள பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன்.
847 | தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் நக்கனை நங்கள்பி ரான்றனை நானடி |
4.088.5 |
தக்கனுடைய வேள்வியை எம் பெருமான் அழித்தான் என்பது அவன் பேராற்றலைக் காட்டுவதற்கு உரிய செயல் ஆகாது. பிறரைத் துன்புறுத்துதலில் மேம்பட்ட அசுரர்களின் மும்மதில்களும் அழியுமாறு கொடிய வில்லில் அம்பினைக் கோத்துச் செயற்பட்ட, பூந்துருத்தியுள் உறையும் பொன்னார் மேனியனும் திகம்பரனுமாய எங்கள் பெருமானை அடியேன் அடி போற்றுகிறேன்.
848 | அருகடை மாலையுந் தானுடை யானழ உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திருவுடைத் தேச மதியனை யானடி |
4.088.6 |
அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய், அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய், கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய், போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய், பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன்.
849 | மன்றியுந் நின்ற மதிலரை மாய கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் அன்றியு செய்தபி ரான்றனை யானடி |
4.088.7 |
தன்னால் ஒறுக்கப்பட்டும் மீண்டும் எதிர்த்துநின்ற முபுர அசுரர்கள் அழியுமாறும் அவர்கள் இனமே ஒழியுமாறும் வெகுண்டு கொடிய வில்லை வளைத்துத் தீயைக்கக்கும் அக்கினியாகிய அம்பினால் அவர்கள் மதிலோடு அழிந்துபோகுமாறு செயற்பட்டுப் பூந்துருத்தியுள் உறைகின்ற, அழித்தற்றொழிலுக்கு மறுதலையாகிய ஆக்கச் செயல்களையும் செய்யும் பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன்.
850 | மின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர் என்னிற மென்றம ரர்பெரியா ரின்னந் பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் என்னிற வெந்தைபி ரான்றனை யானடி |
4.088.8 |
மின்னல் போல ஒளி வீசும் இடையினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாக விரும்பிக் கொண்டவனாய், தேவருள் மிக்கவரும் அவனுடைய உண்மையான நிறம் யாது என்று இன்றுவரை அறிய இயலாதவனாய்ப் பொன்போன்ற சடையை உடையவனாய்ப் பூந்துருத்தியில் உறைகின்ற சூரியன் போல ஒளிவீசும் எந்தை பெருமானை அடியேன் அடிபோற்றுகின்றேன்.
851 | அந்தியை நல்ல மதியினை யார்க்கு செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் புந்தியைப் புக்க வறிவினைப் பூந்துருத் நந்தியை நங்கள்பி ரான்றனை நானடி |
4.088.9 |
மூன்று அந்திநேரத்திலும் வழிபடுதற்கு உரியவனாய், எல்லோருக்கும் நல்லபுத்தியை வழங்குபவனாய், ஒருவராலும் அறிய முடியாதபடி தீயில் சுட்டுத் தூயதாக்கப்பட்ட செம்பொன் நிறத்தினனாய், தன்னைத் தலைவனாகப் பற்றிய அடியேனுடைய உள்ளமாயும் உள்ளொளிரும் ஞானமாயும் இருப்பவனாய், பூந்துருத்தியில் உறைகின்ற நந்தி என்ற பெயருக்குரிய நம் தலைவனை அடியேன் அடிக்கண் பணிந்து போற்றுகின்றேன்.
852 | பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு வைக்கையும் வானிழி கங்கையு மங்கை மொய்க்கை யரக்கனை யூன்றினன் பூந்துருத் மிக்கநல் வேத விகிர்தனை நானடி |
4.088.10 |
படம் எடுத்தலும் பதுங்கிப் பார்த்தலும் உடைய பாம்பினை, வானத்திலிருந்து இறங்கி வந்த கங்கையோடு சடையிலே வைத்து, கயிலைமலை அசைந்ததால் பார்வதி நடுங்க, அங்ஙனம் அசைத்த வலிய புயங்களை உடைய அரக்கனைத் திருவடி விரல் ஒன்றினால் அழுத்தி நெரித்துப் பூந்துருத்தியில் உகந்தருளி இருக்கும் மேம்பட்ட சிறந்த வேதங்களால் போற்றப்படுவோனும், உலகியலில் இருந்து வேறுபட்ட இயல்பினனுமான பெருமானை, அடியேன் அடிக்கண் பணிந்து வணங்குகின்றேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.088.திருப்பூந்துருத்தி , அடியேன், பணிந்து, பெருமானை, உடைய, பூந்துருத்தியுள், யானடிபோற்றுவதே, பூந்துருத்தியில், பார்வதி, அடிக்கண், ரான்றனை, உறையும், அறிய, திருமுறை, திருப்பூந்துருத்தி, நானடிபோற்றுவதே, உறைகின்ற, உடையவனாய், அசுரர்களின், மிக்க, வீசும், வணங்குகின்றேன், வழிபடுகிறேன், நங்கள்பி, அம்பினைக், எல்லாம், மேம்பட்ட, கொடிய, உகந்தருளியிருக்கும், ராணனை, நாமடிபோற்றுவதே, பாகனாய், யாதிபு, திருச்சிற்றம்பலம், நான்காம், தேவாரப், பதிகங்கள், அழித்தவனாய், போரிடும், பாம்பினை, திருவடிக்கண், மும்மதில்களும், இயலாதவனாய்ப், வணங்குகிறோம், தொன், நாம், அழியுமாறு