நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.082.திருக்கழுமலம்

4.082.திருக்கழுமலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
790 | பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் நாலஞ்சு புள்ளின மேந்தின வென்பர் கால்கொண்ட வண்கைச சடைவிரித் தாடுங் காளன்றி மற்று முண்டோ வந்தணாழி |
4.082.1 |
இவ்வுலகினை ஊழிவெள்ளம் மூடி முழுகச் செய்த காலத்தில் உன் பாதங்களை எல்லாம் இருபது பறவைகள் சுமந்தன என்று கூறுவர். குளிர்ந்த பிறை தங்குதலைக் கொண்டதாய், கங்கைக்குத் தங்குமிடம் வழங்கிய வள்ளன்மையை உடைய சடையை விரித்துக்கொண்டு ஆடும் திருக்கழுமலத்துப் பெருமானே! அழகிய குளிர்ந்த கடலாற் சூழப்பட்ட உலகத்துயிர்கள் உனக்கு அடிமையாதல் அன்றி வேறாதலும் உண்டோ?
791 | கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் உடையா னுடைதலை மாலையுஞ் சூடி விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் அடைவார் வினைக ளவையௌக நாடொறு |
4.082.2 |
முகப்பிலே கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க, எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய வேதியன் ஆகிய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர்.
792 | திரைவாய்ப் பெருங்கடன் முத்தங் குவிப்ப நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் விரைவாப் நறுமலர் சூடிய விண்ணவன் வரையாப் பரிசிவை நாடொறு நந்தமை |
4.082.3 |
பெரிய கடல் தன் அலை வாயிலாக முத்துக்களைக் கரையில் சேர்க்க நுரையோடுகரை சேர்ந்த அம் முத்துக்களை நெய்தல் நிலமகளிர் முகந்து கொண்டு ஓட, அத்தகைய வளம் நிறைந்த கழுமலத்துள்நிலையாக இருக்கும், நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய சிவபெருமானுடைய திருவடிகளைச் சூடி, விண்ணவனாகிய அவர் திருவடிக்கே இவை நீக்கலாகாத பரிசுகளென அர்ப்பணிப்பர். அத்திருவடிகள் நாடொறும் நம்மை ஆள்வனவாம். (நுளைச்சியர் முகந்து கொண்டோடிச் சூடி அர்ப்பணிக்கும் பரிசினவான திருவடிகள் நம்மை ஆள்வன என முடிக்க.)
793 | விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் உரைக்கி லரும்பொரு ளுள்ளுவர் கேட்கி இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் நிருத்தம் பழம்படி யாடுங் கழனம்மை |
4.082.4 |
வேதங்களின் சொற்களால் விரித்துரைக்கப் படுபவனாய், மேம்பட்ட நூல்களாற் சிறப்பித்து ஓதப்படுபவனாய், சொற்களால் மக்கள் விளக்கிச் சொல்லமுடியாத அரும் பொருளாய், தன் பெருமையைக் கேட்பவர் தியானிக்கத்தக்கவனாய், உள்ள கழுமலப் பெருமான் தன் ஓசையால் பலரையும் அச்சுறுத்தும்பறையின் ஒலியோடு பூதங்கள் பாடத் தான் பண்டு ஆடும் அந்த வகையிலேயே ஆடுவதற்குப் பயன்படுத்தும் திருவடிகள் நம்மை அடிமையாக ஏற்பனவாகும்.
794 | சிந்தித் தெழுமன மேநினை யாமுன் பந்தித்த வல்வினை தீர்க்கவல் லானைப் சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி முந்தித் தொழுகழ னாடொறு நந்தமை |
4.082.5 |
மனமே! கழுமலத்தைத் தியானித்த அளவிலேயே நம்மைக் கட்டியிருக்கும் கொடிய வினைகளைப் போக்கவல்லவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய் உள்ள பெருமானைத் தரிசித்த அந்த நேரத்திலேயே வினையை நீக்கிவிடுவோம் என்று உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் அடியவர்கள் முற்பட்டுத்தொழும் திருவடிகளே நம்மை நாடோறும் அடிமையாக ஏற்பனவாகும்.
795 | நிலையும் பெருமையு நீதியுஞ் சால அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் சிலையிற் றிரிபுர மூன்றெரித் தார்தங் அலருங் கழலடி நாடொறு நந்தமை |
4.082.6 |
என்றும் நிலைத்திருக்கும் உறுதியும், அந்த உறுதியைப் பெறுவதற்குரிய பெருமையும், உறுதிக்கும் பெருமைக்கும் அடிப்படையான அங்கு வாழும் நன்மக்களுடைய நேர்மையும், மிகவும் அழகுடையனவாக, எங்கும் திரியும் அலைகளை உடைய ஊழிப் பெருவெள்ளத்தில் மிதந்த இத்தோணிபுரத்தில் உகந்தருளியிருப்பவரும், வில்லால் முப்புரங்களையும் தீயூட்டி எரித்த பெருமானுமாம் அவருடைய மலர்ந்த, கழல்களை அணிந்த திருவடிகள் நாள்தோறும் நம்மை அடிமையாக ஏற்பனவாகும்.
796 | முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய |
4.082.7 |
எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள்பின்னிக் கிடக்க, விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த, வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது.கொன்றையும் துன்றி - பாடம்.
797 | உடலு முயிரு மொருவழிச் சொல்லு அடையு முனைவந் தடைந்தா ரமர நடையும் விழவொடு நாடொறு மல்குங் விடையன் றனிப்பத நாடொறு நந்தமை |
4.082.8 |
உடலும் அவ்வுடலைச் செலுத்தும் உயிரும் உலகியல் பொருள்களிலேயே புறப்பற்றும் அகப்பற்றும் கொண்டு வாழ்க்கையை நடத்தும் இவ்வுலகிலே, கூத்தும் திருவிழாக்களும் நாள்தோறும் மிகுதியாக நிகழும் கழுமலத்துள், தேவர்கள்சென்று அடையத்தக்க சரணியன் ஆன உன்னை அணுகி உன்திருவடிக்கீழ்ச் சரணாக மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய காளை வாகனனாகிய உன் ஒப்பற்ற திருவடிகளே நாள்தோறும் நம்மை ஆள்வன.
798 | பரவைக் கடனஞ்ச முண்டது மில்லையிப் நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி அரவக் கழலடி நாடொறு நந்தமை |
4.082.9 |
பரந்த கடலில்தோன்றிய நஞ்சினை உண்ணாமல் கழுத்திலேயே இறுத்திவிட்டாய். அந்நீலகண்டம் இவ்வுலகத்தார் எல்லோராலும் வரிசையாக வணங்கித் தொழப்படுகின்றது. தீத்தம்ப மாக நீண்ட வடிவெடுத்தாயாக, அத்தகைய உன் திருவடிகளைக் காணத் தம் முயற்சியால் திருமாலும் பிரமனும் முயன்று, பின் வழிபாட்டால் காண்பதற்கு வந்து சேர்ந்துள்ளனர். அத்தகைய கழல்கள் ஒலிக்கும் திருவடிகளே நாளும் நம்மை ஆள்வன.
799 | கரையார் கடல்சூ ழிலங்கையர் கோன்றன் தொலையா மலரடி யூன்றலு முள்ளம் தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் அலையாப் பரிசிவை நாடொறு நந்தமை |
4.082.10 |
கரையை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய முடிகள் நெரியுமாறு, ஒருகாலத்தும் அழிவில்லாத மலர் போன்ற திருவடி விரலை ஊன்றிய அளவில் அவன் உள்ளம் நடுநடுங்கித் தலை பத்தும் வீழ்ந்து வணங்கிக் கிடக்குமாறு கயிலைமலைக்கண் உயர்ந்து விளங்கிய பெருமானுடைய திருக்கழுமலத்தலத்தைத் தரிசிப்பதனால், பிறவிப் பிணியில் வருந்தாத தன்மையை வழங்கும் அப்பெருமானுடைய திருவடிகளாகிய இவை நம்மை நாள்தோறும் அடிமையாக ஏற்பனவாகும்
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.082.திருக்கழுமலம் , நம்மை, நந்தமையாள்வனவே, நாடொறு, உடைய, அடிமையாக, அத்தகைய, நாள்தோறும், அந்த, ஆள்வன, திருவடிகள், திருமுறை, திருவடிகளே, ஏற்பனவாகும், திருக்கழுமலம், கிடந்து, வந்து, பெருமானுடைய, நான்காம், சூடி, பூதங்கள், சொற்களால், வணங்கித், தொழப்படு, உள்ள, மக்கள், கழலடி, தேவாரப், வேதியன், பெரிய, எல்லா, சூழப்பட்ட, ஆடும், திருச்சிற்றம்பலம், குளிர்ந்த, சடையை, மகிழ்ந்து, காளை, பரிசிவை, பதிகங்கள், முகந்து, சூடிய, நாடோறும், வழங்கும், அடியவர்கள், கொண்டு