நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.083.திருக்கழுமலம்

4.083.திருக்கழுமலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
800 | படையார் மழுவொன்று பற்றிய கையன் கடையார் கொடிநெடுமாடங்க ளோங்குங் மடைவாய்க் குருகினம்பாளை விரிதொறும் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் |
4.083.1 |
படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால், நகர்ப்புறவாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம். அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.083.திருக்கழுமலம் , திருக்கழுமலம், திருமுறை, விளங்கும், கொண்டு, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப்