நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.079.குறைந்த திருநேரிசை

4.079.குறைந்த திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
764 | மானங் காப்ப தாகித் அம்மானையமுதன் றன்னை செம்மான வொளிகொண்மேனிச் எம்மானைநினைய மாட்டே |
4.079.1 |
மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுடைய கண்வலையிற்பட்டு, அதனால்,தலைவனாய் அமுதம் போன்று இனியனாய், எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய், செம்மேனி அம்மானாய், அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன். யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான்?
765 | மக்களே மணந்த தார சிக்குளே யழுந்தி யீசன் கொப்புளே போலத் தோன்றி இக்களே பரத்தை யோம்ப |
4.079.2 |
மனைவி, மக்கள், அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில ஈடுபடாது, தவம் என்பதனை உணராது, நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப்பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
766 | கூழையே னாக மாட்டேன் ஏழினின் னிசையி னாலு மாழையொண் கண்ணி னல்ல ஏழையே னாகி நாளு |
4.079.3 |
கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில்பிறப்பெடுத்தேன் நான்?
767 | முன்னையென் வினையி னாலே பின்னைநான் பித்த னாகிப் என்னுளே மன்னி நின்ற என்னுளே நினைய மாட்டே |
4.079.4 |
முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன். அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான்?
768 | கறையணி கண்டன் றன்னைக் பிறைநுதற் பேதை மாதர் மறைநவி னாவி னானை இறையேயு மேத்த மாட்டே |
4.079.5 |
நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன். பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன். வேதங்களை ஓதும் நாவினை உடைய எம்பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?
769 | வளைத்துநின் றைவர் கள்வர் தளைத்துவைத் துலையை யேற்றித் திளைத்துநின் றாடு கின்ற இளைத்துநின் றாடு கின்றே |
4.079.6 |
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்துநீத்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தௌவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.079.குறைந்த திருநேரிசை , நான், றோன்றி, னேனே, யாது, உடைய, செய்வதற்காக, திருநேரிசை, நின்று, பிறப்பெடுத்தேன், திருமுறை, இல்லாதேனாய், குறைந்த, வேறு, செயல், நினைய, றாடு, பேதை, அல்லேன், அடியேன், பெருமானை, இவ்வுலகில், மாட்டேனென்செய்வான், எம்பெருமான், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், ஈடுபட்டு, அவர்களுடைய, செய்வதற்காகப், மக்கள், போலத், குழியில்