நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.078.குறைந்த திருநேரிசை

4.078.குறைந்த திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
754 | வென்றிலேன் புலன்க ளைந்தும் சென்றிலே னாத லாலே நின்றுளே துளும்பு கின்றே இன்றுளே னாளை யில்லே |
4.078.1 |
எல்லோரையும் ஆளும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன், ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய், உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்று உறுதி இல்லை. அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான்
755 | கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும் உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன் பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன் எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே. |
4.078.2 |
ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்றஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன். அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன். இறைவனே! நான் எதற்காக இருக்கிறேன்? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
756 | மாட்டினேன் மனத்தை முன்னே மூட்டிநான் முன்னை நாளே பாட்டினாய் போல நின்று ஈட்டினேன் களைய மாட்டே |
4.078.3 |
என் மனத்தை இம்மையில் செலுத்தி, மறுமையை உணராது, வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது, பெருமை இல்லாத நாய் போல நின்று, உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி, அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
757 | கரைக்கடந் தோத மேறுங் உரைக்கடந் தோது நீர்மை அரைக்கிடந் தசையு நாக கிரைக்கடைந் துருகு கின்றே |
4.078.4 |
கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன். ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன். ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி, சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும், பசியைப்போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன்.
758 | செம்மைவெண் ணீறு பூசுஞ் வெம்மைநோய் வினைகடீர்க்கும் அம்மைநின் றடிமை செய்யா கிம்மைநின் றுருகு கின்றே |
4.078.5 |
செம்மையான மேனியில், திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய, கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து, இப்பிறப்பில் உருகுகின்றேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
759 | பேச்சொடு பேச்சுக் கெல்லாம் கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன் நன்மையை யுணர மாட்டேன் யென்செய்வான் றோன்றி னேனே. |
4.078.6 |
பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய், கொடுமையை நீக்குமாறு அறியேனாய், சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய், இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?
760 | தேசனைத் தேச மாகுந் பூசனைப் புனிதன் றன்னைப் நேசனை நெருப்பன் றன்னை ஈசனை யறிய மாட்டே |
4.078.7 |
ஒளிஉடையவனாய், உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய், எல்லாராலும் வணங்கப்படுபவனாய், தூயவனாய், அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய், அன்பனாய், தீயைஏந்தியவனாய், செம்பொருளாய் உள்ள பெருமானை, அறியமுடியாதவனாகின்றேன். எதற்காகப் பிறந்தேன் நான்?
761 | விளைக்கின்ற வினையை நோக்கி முளைக்கின்ற வினையைப் போக திளைக்கின்ற முடியி னான் திளைக்கின்றே னிருமி யூன்றி |
4.078.8 |
இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது, கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல், வீணாக இருமிக்கொண்டு, தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன். எதற்காகப் பிறப் பெடுத்தேன் நான்?
762 | விளைவறி விலாமை யாலே களைகணு மில்லே னெந்தாய் தளையவிழ் கோதை நல்லார் இளையனு மல்லே னெந்தா |
4.078.9 |
எந்தாய்! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து, ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாதுஇருக்கின்றேன். உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன். மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன். அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
763 | வெட்டன வுடைய னாகி துட்டனைத் துட்டுத் தீர்த்துச் அட்டமா மூர்த்தி யாய எட்டனை யெட்ட மாட்டே |
4.078.10 |
கடும் போக்கு உடையனாகி, தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின்செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.078.குறைந்த திருநேரிசை , நான், னேனே, றோன்றி, எதற்காகப், பிறப்பெடுத்தேன், திருநேரிசை, உடைய, அல்லேன், திருமுறை, அவன், சிவபெருமானுடைய, மாட்டேனென்செய்வான், குறைந்த, செயலை, போக்கும், பெருமானை, நினைத்து, திருச்சிற்றம்பலம், வினையைப், வினையை, பிறந்தேன், சொல்லி, ஆதலின், பெருமையை, அடியேன், நான்காம், இல்லாத, தேவாரப், மனத்தை, யுணர, கின்றேனென்செய்வான், நின்று, பதிகங்கள், உயிருடன்