நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.076.தனித் திருநேரிசை

4.076.தனித் திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
736 | மருளவா மனத்த னாகி இருளவா வறுக்கு மெந்தை அருளவாய் பெறுத லின்றி பொருளவாத் தந்த வாறே |
4.076.1 |
அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும்விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
737 | மெய்ம்மையா முழவைச் செய்து பொய்ம்மையாங் களையை வாங்கிப் தம்மையு நோக்கிக் கண்டு செம்மையு ணிற்ப ராகிற் |
4.076.2 |
சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத்தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.
738 | எம்பிரா னென்ற தேகொண் கெம்பிரா னாட்ட வாடி எம்பிரா னென்னைப் பின்னைத் எம்பிரா னென்னி னல்லா |
4.076.3 |
எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம்பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?
739 | காயமே கோயி லாகக் வாய்மையே தூய்மை யாக நேயமே நெய்யும் பாலா பூசனை யீச னார்க்குப் |
4.076.4 |
இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.
740 | வஞ்சகப் புலைய னேனை அஞ்சலென் றாண்டு கொண்டா நெஞ்சகங் கனிய மாட்டே நஞ்சிடங் கொண்ட கண்டா |
4.076.5 |
நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடுபட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?
741 | நாயினுங் கடைப்பட் டேனை ஆயிர மரவ மார்த்த நீயுமென் நெஞ்சி னுள்ளே நோயவை சாரு மாகி |
4.076.6 |
பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கிவிட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.
742 | விள்ளத்தா னொன்று மாட்டேன் வள்ளத்தேன் போல நுன்னை உள்ளத்தே நிற்றி யேனு கள்ளத்தே நிற்றி யம்மா |
4.076.7 |
விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவது போல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.
743 | ஆசைவன் பாச மெய்தி ஊசலாட் டுண்டு வாளா தேசனே தேச மூர்த்தீ ஈசனே யுன்றன் பாத |
4.076.8 |
ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டிக் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.
744 | நிறைவிலே னேச மில்லே மறைவிலே புறப்பட் டேறும் சிறையிலேன் செய்வ தென்னே குறைவிலேன் குற்றந் தீராய் |
4.076.9 |
கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்றுநினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.
745 | நடுவிலாக் காலன் வந்து அடுவன வஞ்சு பூத படுவன பலவுங் குற்றம் கெடுவதிப் பிறவி சீசீ |
4.076.10 |
செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ்கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளைவேண்டுகின்றேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.076.தனித் திருநேரிசை , அடியேன், திருநேரிசை, திருமுறை, உள்ளத்தில், அடியேனுடைய, என்னும், உடைய, எம்பெருமான், தனித், உன்னை, நன்மை, நிலையை, நான், வந்து, மனம், நிற்றி, சடையி, சடையை, இல்லேனாய், அருளுவாயாக, இயலாதேனாய், என்றாலும், செய்வாயாக, காட்டி, இருக்கும், அருள், எல்லாம், அடியேனுக்கு, பெருமான், நீரைப், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், முதலிய, விருப்பம், யாது, செயற்பாலேன், தூய்மை, அவன், கொண்ட, ஆகிய, நின்று, நெய்யும்