நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.075.தனித் திருநேரிசை

4.075.தனித் திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
726 | தொண்டனேன் பட்ட தென்னே கொண்டிருக் கோதி யாட்டிக் இண்டைகொண் டேற நோக்கி கண்டனைக் கண்டி ராதே |
4.075.1 |
தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி, தலையில் மாலையை அணிவித்து, நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல், காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது.
727 | பின்னிலேன் முன்னிலே னான் என்னிலே னாயி னேனா சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் நின்னலாற் களைக ணாரே |
4.075.2 |
முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும், தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே! திருநீறணிந்த மார்பினனே! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான். எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர்?
728 | கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் தௌளியே னாகி நின்று உள்குவா ருள்கிற் றெல்லா வெள்கினேன் வெள்கி நானும் |
4.075.3 |
வஞ்சனை உடைய யான், போலித் தொண்டனாய், காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி, பின் மனத்தௌவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன். நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
729 | உடம்பெனு மனைய கத்து மடம்படு முணர்நெய் யட்டி இடம்படு ஞானத் தீயா கடம்பமர் காளை தாதை |
4.075.4 |
உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்.
730 | வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று வஞ்சனே னென்செய் கேனே. |
4.075.5 |
வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்குமிடம் சடைமுடி. அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடையபாம்புகள் உறங்காவாய் உள்ளன. அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது. அந்தக் கங்கையினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான். அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி, வஞ்சனை உடைய அடியேன், வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன்?
731 | உள்குவா ருள்ளத் தானை உள்கினே னானுங் காண்பா எள்கினே னெந்தை பெம்மா கொள்ளிமே லெறும்பெ னுள்ள |
4.075.6 |
நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து, உருகி அன்பு ஊறி, உள்ளம் உருகினேன். எந்தையாகிய பெருமானே! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும்?
732 | மோத்தையைக் கண்ட காக்கை வார்த்தையைப் பேச வொட்டா சீத்தையைச் சிதம்பு தன்னைச் ஊத்தையைக் கழிக்கும் வண்ண |
4.075.7 |
பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன். உலகத்துக்குத் தலைவனே! வெறுக்கத் தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவஞானத்தை அருளுவாயாக.
733 | அங்கத்தை மண்ணுக் காக்கி பங்கத்தைப் போக மாற்றிப் சங்கொத்தமேனிச் செல்வா எங்குற்றாயென்ற போதா |
4.075.8 |
மேம்பட்டவனே! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன். என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை, எங்கிருக்கின்றாய் என்று வினவினால், இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக.
734 | வெள்ளநீர்ச் சடைய னார்தாம் னுள்ளமே புகுந்து நின்றார்க் கள்ளரோ புகுந்தீரென்னக் வெள்ளரோமென்று நின்றார் |
4.075.9 |
விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான், ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக, உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ, என் உள்ளத்தில் கலந்திருந்து, தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார்.
735 | பெருவிர லிறைதா னூன்றப் தருவரை யனைய தோளா இருவரு மொருவ னாய திருவடி சுமந்து கொண்ட |
4.075.10 |
பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான், தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான். சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்யைப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.075.தனித் திருநேரிசை , உடைய, அடியேன், வஞ்சனை, கொண்டு, திருநேரிசை, உன்னைத், உள்ள, திருமுறை, நான், தனித், நான்காம், சிவபெருமான், அந்தச், கங்கை, உள்ளம், உன்னை, சுமந்து, புகுந்து, அடியோடு, கண்ட, வாழ்க்கை, உள்ளத்தில், அருள், போக்கி, அடியேனுடைய, தலையில், திருச்சிற்றம்பலம், பிறை, மாலையை, நினைப்பவர், தேவாரப், பதிகங்கள், உடம்பு