நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த

4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
716 | முத்தினை மணியைப் பொன்னை கொத்தினை வயிர மாலைக் வித்தினை வேத வேள்விக் அத்தனை நினைந்த நெஞ்ச |
4.074.1 |
முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து, வேதவேள்வி, வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை, நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே!
717 | முன்பனை யுலகுக் கெல்லா இன்பனை யிலங்கு சோதி வன்பனைத் தடக்கை வேள்விக் அன்பனை நினைந்த நெஞ்ச |
4.074.2 |
வலியனாய், உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய், ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள, பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
718 | கரும்பினுமினியான் றன்னைக் இருங்கட லமுதந் தன்னை பெரும்பொருட் கிளவி யானைப் அரும்பொனை நினைந்த நெஞ்ச |
4.074.3 |
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
719 | செருத்தனை யருத்தி செய்து கருத்தனைக் கனக மேனிக் கொருத்தனை யொருத்தி பாகம் நிருத்தனை நினைந்த நெஞ்ச |
4.074.4 |
போரிடுவதில் விருப்பம் கொண்டு, நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய், பொன்மேனி அம்மானாய், தன்னைத் தியானிக்கும் தேவர் களுக்கு ஒப்பற்ற தலைவனாய், பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே!
720 | கூற்றினை யுதைத்த பாதக் றேற்றனை யிமையோ ரேத்த ஆற்றனை யடிய ரேத்து நீற்றனை நினைந்த நெஞ்ச |
4.074.5 |
கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய், இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய், தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய், அடியார்கள் போற்றும் அமுதமாய், சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
721 | கருப்பனைத் தடக்கை வேழக் விருப்பனை விளங்கு சோதி பொருப்பனைப் பொருப்பன் மங்கை நெருப்பனை நினைந்த நெஞ்ச |
4.074.6 |
கரிய, பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய், நீலகண்டனாய், எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய், சோதி வடிவினனாய், கயிலை மலையினனாய், பார்வதி பாகனாய், உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
722 | நீதியா னினைப்பு ளானை சாதியைச் சங்கவெண் ணீற் சோதியைத் துளக்க மில்லா ஆதியை நினைந்த நெஞ்ச |
4.074.7 |
விதிப்படி தியானிக்கப்படுபவனாய், சாதி மாணிக்கமாய், சங்கைப் போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய், வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய், தூண்டா விளக்காய் உள்ள, ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
723 | பழகனை யுலகுக் கெல்லாம் மழகளி யானையின் றோன் குழகனைக் குழவித் திங்கள் அழகனை நினைந்த நெஞ்ச |
4.074.8 |
உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய், பெருவடிவுடையவனாய், மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய், பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
724 | விண்ணிடை மின்னொப் பானை கண்ணிடை மணியொப் பானைக் எண்ணிடை யெண்ண லாகா அண்ணலை நினைந்த நெஞ்ச |
4.074.9 |
வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய், தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய், கண்ணில் மணி போலவும், செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய், திருமாலும், பிரமனும் தன் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
725 | உரவனைத் திரண்ட திண்டோ நிரவனை நிமிர்ந்த சோதி குரவனைக் குளிர்வெண் டிங்கட் அரவனை நினைந்த நெஞ்ச |
4.074.10 |
ஞான வடிவினனாய், திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய், மும்மதில்களையும் அழித்தவனாய், மிக்க ஒளியும், நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய், குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள, ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த , நினைந்த, வாறே, நெஞ்சம், நினைந்தவாறே, உள்ள, பெருமானை, உடைய, நெஞ்சமழகிதா, அழகிதா, தலைவனாய், திருமுறை, பார்வதி, நெஞ்சநேர்பட, பெரிய, நெஞ்சம்ஈசனைநினைந்த, சோதி, உடையவனாய், நான்காம், செலுத்தி, அழித்தவனாய், நீண்ட, திரண்ட, குளிர்ந்த, வடிவினனாய், இளைய, நேர்பட, கொண்டு, வலிய, தேவர்கள், என்னே, யுலகுக், எனும், பொன், யமரர், பதிகங்கள், தடக்கை, யுரித்த, பனைபோன்ற, துதிக்கையை, திருச்சிற்றம்பலம், அஞ்சுமாறு, முனிவர்கள், துதிக்கும், தேவாரப்