நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.072.திருவின்னம்பர்

4.072.திருவின்னம்பர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
697 | விண்ணவர் மகுட கோடி பெண்ணொரு பாகர் போலும் வண்ணமா லயனுங் காணா எண்ணுரு வநேகர் போலும் |
4.072.1 |
இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர், தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர். பார்வதி பாகர். ஆண் பெண் அலி ஆனவர். நல்ல அழகுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர். அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர்.
698 | பன்னிய மறையர் போலும் துன்னிய சடையர் போலுந் மன்னிய மழுவர் போலும் என்னையு முடையர் போலும் |
4.072.2 |
இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து, இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி, செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து, மழுப்படை தாங்கிய கையராய், பார்வதி பாகராய், அடியேனையும் அடியவனாக உடையவர்.
699 | மறியொரு கையர் போலும் பறிதலைப் பிறவி நீக்கிப் செறிவுடை யங்க மாலை எறிபுனற் சடையர் போலும் |
4.072.3 |
ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய், தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் சமணத் தோற்றத்தை நீக்கி, அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய், செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய், அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன்.
700 | விடமலி கண்டர் போலும் கடவுநல் விடையர் போலுங் படமலி யரவர் போலும் இடர்களைந் தருள்வர்போலும் |
4.072.4 |
இன்னம்பர் ஈசன், நஞ்சு பொருந்திய கழுத்தினராய், தக்கன் வேள்வியை அழித்தவராய், பெரிய காளையைச் செலுத்துபவராய், கூற்றுவனைக் கோபித்தவராய், படம் எடுக்கும் பாம்பினை உடையவராய், பரவிய புலித்தோலை உடுத்தவராய், அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர்.
701 | அளிமலர்க்கொன்றை துன்று களிமயிற்சாய லோடுங் வெளிவளருருவர் போலும் எளியவரடியர்க் கென்றும் |
4.072.5 |
இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய. ஒளிவீசும் சடையை உடையவராய், மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய், எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய், திருநீற்றை அணிபவராய், அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார்.
702 | கணையமர் சிலையர் போலுங் துணையமர் பெண்ணர் போலுந் அணையுடை யடியர் கூடி இணையடி யுடையர் போலும் |
4.072.6 |
இன்னம்பர் ஈசன். அம்பு பொருந்திய வில்லினராய், யானைத்தோற் போர்வையினராய், பார்வதி பாகராய், தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய், உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார்.
703 | பொருப்பமர் புயத்தர் போலும் மருப்பிள வாமை தாங்கு உருத்திர மூர்த்தி போலும் எரித்திடு சிலையர் போலும் |
4.072.7 |
இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய், கங்கையை அணிந்த சடையினராய், பன்றியின் கொம்பு, இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய், உருத்திர மூர்த்தியாய், நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார்.
704 | காடிட முடையர் போலுங் வேடுரு வுடையர் போலும் கோடலர் வன்னி தும்பை ஏடமர் சடையர் போலும் |
4.072.8 |
இன்னம்பர் ஈசன், சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் ,கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய், அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய், பிறை சூடியவராய், கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள், தும்பை, வன்னி, கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார்.
705 | காறிடு விடத்தை யுண்ட நீறுடை யுருவர் போலும் பாறுடைத் தலைகை யேந்திப் ஏறுடைக் கொடியர் போலும் |
4.072.9 |
இன்னம்பர் ஈசன், கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோள்களை உடையவராய், திருநீறு அணிந்த வடிவினராய், நினைப்பதற்கும் எட்டாதவராய், பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் எந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய், காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார்.
706 | ஆர்த்தெழு மிலங்கைக் கோனை பார்த்தனோ டமர் பொருது தீர்த்தமாங் கங்கை தன்னைத் ஏத்துவே ழுலகும் வைத்தார் |
4.072.10 |
இன்னம்பர் ஈசன், ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை, மலையின் கீழ் நசுக்கியவர். அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படை களைக் கொடுத்து அருளியவர். தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர். தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார்
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.072.திருவின்னம்பர் , னாரே, இன்னம்பர், ஈசன், போலும்இன்னம்ப, பார்வதி, உடையவராய், யுடையர், பாகராய், உள்ளார், அணிந்த, பொருந்திய, திருமுறை, சடையர், சடையில், திருவின்னம்பர், சடையை, நான்காம், உடைய, கழுத்தினராய், எடுத்தவராய், வன்னி, தோள்களை, உடையவருமாவார், சிலையர், தேவாரப், பதிகங்கள், உடையவர், செறிந்த, பெரிய, பாகர், கையில், கங்கையைச், வடிவினராய், திருச்சிற்றம்பலம், முடையர்