நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.071.திருநாகைக்காரோணம்
4.071.திருநாகைக்காரோணம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
688 | மனைவிதாய் தந்தை மக்கள் வினையுளே விழுந்த ழுந்தி கனையுமா கடல்சூழ் நாகை நினையுமா வல்லீ ராகி |
4.071.1 |
மனமே! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம்.
689 | வையனை வைய முண்ட செய்யனைச் செய்ய போதிற் கையனைக் கடல்சூழ் நாகைக் ஐயனை நினைந்த நெஞ்சே |
4.071.2 |
எருதை ஊர்பவனாய், ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய், செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும்.
690 | நிருத்தனை நிமலன் றன்னை விருத்தனை வேத வித்தை கருத்தனைக் கடல்சூழ் நாகைக் ஒருத்தனை யுணர்த லானா |
4.071.3 |
மனமே! கூத்தனாய், தூயனாய், நீண்ட இவ்வுலகம், தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய், வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய், தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே.
691 | மண்டனை யிரந்து கொண்ட தெண்டிரை கடைய வந்த கண்டனைக் கடல்சூழ் நாகைக் அண்டனை நினைந்து நெஞ்சே |
4.071.4 |
உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தௌந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும்.
692 | நிறைபுன லணிந்த சென்னி மறையொலி பாடி யாடன் கறைமலி கடல்சூழ் நாகைக் இறைவனை நாளு மேத்த |
4.071.5 |
கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி, வேதங்களைப் பாடிக்கொண்டு, சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய், கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும்.
693 | வெம்பனைக் கருங்கை யானை கம்பனைக் காலற் காய்ந்த உம்பனை யும்பர் கோனை செம்பொனை நினைந்த நெஞ்சே |
4.071.6 |
கொடிய, பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய், கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய், உலகங்கள் துதிக்கும் தேவனாய், தேவர்கள் தலைவனாய், நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த. நெஞ்சே! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று.
694 | வெங்கடுங் கானத் தேழை றங்கமர் மலைந்து பார்த்தற் மங்கைமா ராட லோவா கங்குலும் பகலுங் காணப் |
4.071.7 |
வெப்பம் மிக்ககொடிய காட்டிலே, பார்வதியோடு வேடன் வடிவில் சென்று, அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய், பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே!.
695 | தெற்றினர் புரங்கண் மூன்றுந் செற்றவெஞ் சிலையர் வஞ்சர் கற்றவர் பயிலு நாகைக் பெற்றவர் பிறந்தார் மற்றுப் |
4.071.8 |
மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய், வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.
696 | கருமலி கடல்சூழ் நாகைக் தொருவிர னுதிக்கு நில்லா இருதிற மங்கை மாரோ திருவடி தரித்து நிற்கத் |
4.071.9 |
மனமே! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான். கங்கை, பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.071.திருநாகைக்காரோணம் , நாம், கடல்சூழ், வாறே, உள்ள, நாகைக்காரோணங், முய்ந்த, கொண்ட, மனமே, நினைந்த, திருநாகைக்காரோணம், திருமுறை, கோயில், துயரங்களிலிருந்து, கொடிய, உடைய, உடையவனாய், ஒருபுறம், கடல், திருவடிகளை, வியக்கத்தகும், கடைய, தேவாரப், காரோணத்தில், நான்காம், ரோணத், விருப்புற்று, உறையும், சூழ்ந்த, நெஞ்சி, ஆற்றல், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், னீரே, நெஞ்சேயம்மநா, நாகைக்