நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.070.திருநனிபள்ளி
4.070.திருநனிபள்ளி
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர்.
தேவியார் - பர்வதராசபுத்திரி.
679 | முற்றுணை யாயி னானை சொற்றுணை யாயி னானைச் உற்றுணர்ந் துருகி யூறி நற்றுணை யாவர் போலு |
4.070.1 |
நனிபள்ளிப் பெருமான் முதல் துணைவராய், மூவர்க்கும் தலைவராய், வேதத்துக்கு இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர்பெருக்கும் அடியவர்களுக்குப் பெரிய துணையாபவராய் உள்ளார்.
680 | புலர்ந்தகால் பூவு நீரங் வலஞ்செய்து வாயி னூலால் சிலந்தியை யரைய னாக்கிச் நலந்திகழ் சோலை சூழ்ந்த |
4.070.2 |
அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான், பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே, பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி, எல்லா நலன்களையும்அருளிய ஆற்றலுடையவராவர்.
681 | எண்பதும் பத்து மாறு கண்பழக் கொன்று மின்றிக் செண்பகந் திகழும் புன்னை நண்புசெய் சோலை சூழ்ந்த |
4.070.3 |
செண்பகம், விளங்கும் புன்னை, செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே! 96 தத்துவ தாத்துவிகங்களும் என் உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன் துன்பத்தாற் சீர்குலைந்தேன்.
682 | பண்ணினார் பாட லாகிப் கண்ணினார் பார்வை யாகிக் எண்ணினா ரெண்ண மாகி நண்ணினார் வினைக டீர்ப்பார் |
4.070.4 |
நனிபள்ளிப்பெருமான் பண் அமைந்த பாடலாகவும், பழத்தின் சுவையாகவும், கண்ணிற் பொருந்திய பார்வையாகவும், கருத்தில் அமைந்த காதல் நினைவாகவும், எண்ணுகின்றவருடைய எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப் போக்குபவராகவும் உள்ளார்.
683 | துஞ்சிருள் காலை மாலை அஞ்செழுத் தோதி னாளு வஞ்சனைப் பாற்சோ றாக்கி நஞ்சமு தாக்கு வித்தார் |
4.070.5 |
இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள்.
684 | செம்மலர்க் கமலத் தோனுந் அம்மலர்ப் பாதங் காண்பா நின்மல னென்றங் கேத்து நம்மல மறுப்பர் போலு |
4.070.6 |
செந்தாமரைப் பூவிலுள்ள பிரமன் திருமுடியைக் காணவும், சக்கரத்தை ஏந்திய திருமால் அகழ்ந்தும், தாமரை போன்ற பாதங்களைக் காணவும், இயலாதாராய்த் தம்மைக் களங்கமற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார்.
685 | அரவத்தால் வரையைச் சுற்றி அரவித்துக் கடையத் தோன்று விரவித்தம் மடிய ராகி நரகத்தில் வீழ வொட்டார் |
4.070.7 |
மந்தரம் என்ற மத்திலே வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய், தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில் நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார்.
686 | மண்ணுளே திரியும் போது புண்ணுளே புரைபு ரையன் |
4.070.8 |
இவ்வுலகினில் சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன. புண்ணினுள்ளே பல துவாரங்களை உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு...
687 | பத்துமோ ரிரட்டி தோளான் பத்துமோ ரிரட்டி தோள்கள் பத்துவாய் கீதம் பாடப் பத்தர்தாம் பரவி யேத்து |
4.070.9 |
பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட, இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.070.திருநனிபள்ளி , யடிக, ளாரே, உள்ளார், திருமுறை, கலந்து, உடைய, நனிபள்ளிப், திருநனிபள்ளி, நனிபள்ளி, காணவும், இல்லாத, இருபது, அடிகளார், சுற்றித், அன்பு, அவன், தோள்களை, போது, ரிரட்டி, திரியும், நனிபள்ளிப்பெருமான், திருச்சிற்றம்பலம், யாயி, பதிகங்கள், தேவாரப், நான்காம், போலுநனிபள்ளி, பெருமான், பத்து, குரவம், விளங்கும், சூழ்ந்தநனிபள்ளி, சோலை, அமைந்த