நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.069.திருக்கோவலூர்வீரட்டம்

4.069.திருக்கோவலூர்வீரட்டம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
669 | செத்தையேன் சிதம்பன் நாயேன் பொத்தையே போற்றி நாளும் எத்தைநான் பற்றி நிற்கே கொத்தையேன் செய்வ தென்னே |
4.069.1 |
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய், நாய் போன்றேனாய், குற்றமுடையேனாய், முடைநாற்றம் உடையேனாய், அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய், இருள் தீரமனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன்? யாது செயற்பாலேன்?
670 | தலைசுமந் திருகை நாற்றித் நிலையிலா நெஞ்சந் தன்னு விலைகொடுத் தறுக்க மாட்டேன் குலைகள்மாங் கனிகள் சிந்துங் |
4.069.2 |
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக்கோவலூர்ப் பெருமானே! தலையைச் சுமந்து கொண்டு, இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன்.
671 | வழித்தலைப் படவு மாட்டேன் பழித்திலேன் பாச மற்றுப் இழித்திலேன் பிறவி தன்னை கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் |
4.069.3 |
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தௌந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய், நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய், இப்பிறப்பை இழிவாகக் கருதேனாய், யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன்.
672 | சாற்றுவ ரைவர் வந்து காற்றுவர் கனலப் பேசிக் ஆற்றுவ ரலந்து போனே கூற்றுவர் வாயிற் பட்டேன் |
4.069.4 |
கோவலூர்ப்பெருமானே! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண், செவி, மூக்கு, வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன்.
673 | தடுத்திலே னைவர் தம்மைத் படுத்திலேன் பரப்பு நோக்கிப் அடுத்திலேன் சிந்தை யார கொடுத்திலேன் கொடிய வாநான் |
4.069.5 |
கோவலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய், எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு, அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய், மனம் நிறைய அன்புகொண்டு அவ்வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே!
674 | மாச்செய்த குரம்பை தன்னை நாச்செய்த நாலு மைந்து காச்செய்த காயந் தன்னு கோச்செய்து குமைக்க வாற்றேன் |
4.069.6 |
கோவலூர்ப் பெருமானே! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக, ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
675 | படைகள்போல் வினைகள் வந்து விடகிலா வாத லாலே இடையிலே னென்செய் கேனா கொடையிலேன் கொள்வதே நான் |
4.069.7 |
கோவலூர்ப் பெருமானே! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால், என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன், பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
676 | பிச்சிலேன் பிறவி தன்னைப் துச்சுளே யழுந்தி வீழ்ந்து அச்சனா யாதி மூர்த்திக் கொச்சையேன் செய்வ தென்னே |
4.069.8 |
கோவலூர்ப் பெருமானே! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன். உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது?
677 | நிணத்திடை யாக்கை பேணி மணத்திடை யாட்டம் பேசி கணத்திடை யாட்டப் பட்டுக் குணத்திடை வாழ மாட்டேன் |
4.069.9 |
கோவலூர்ப் பெருமானே! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய், திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற் படுத்தப்பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன்.
678 | விரிகட லிலங்கைக் கோனை இருபது தோளும் பத்துச் பரவிய பாடல் கேட்டுப் குரவொடு கோங்கு சூழ்ந்த |
4.069.10 |
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான். விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.069.திருக்கோவலூர்வீரட்டம் , னீரே, பெருமானே, அடியேன், ரட்ட, கோவலூர்ப், திருக்கோவலூர்ப், நாள்தோறும், விரும்பி, ஐம்பொறிகள், திருமுறை, கொண்டு, திருக்கோவலூர்வீரட்டம், இயலாதேனாய், பெருமான், நான்காம், இவ்வுடம்பில், உள்ள, அவன், செய்து, மரமும், கொடுத்து, வந்து, வினைகள், நின்று, உன்னை, செய்வ, வீரட்ட, தன்னுணித்தலு, யாது, பற்றி, திருச்சிற்றம்பலம், பிறவி, தேவாரப், அவற்றின், பதிகங்கள், முன்