நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.065.திருச்சாய்க்காடு

4.065.திருச்சாய்க்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்.
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
629 | தோடுலா மலர்கள் தூவித் வீடுநா ளணுகிற் றென்று பாடுதான் செலலு மஞ்சிப் சாடினார் காலன் மாளச் |
4.065.1 |
இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக, அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார்.
630 | வடங்கெழு மலைமத் தாக கடைந்திட வெழுந்த நஞ்சங் அடைந்துநுஞ் சரண மென்ன தடங்கட னஞ்ச முண்டார் |
4.065.2 |
பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய, எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவபெருமானை அடைந்து 'நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம்' என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்டபிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார்.
631 | அரணிலா வெளிய நாவ வரணிய லாகித் தன்வாய் முரணிலாச் சிலந்தி தன்னை தரணிதா னாள வைத்தார் |
4.065.3 |
காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக, தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச்செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறுசெய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான்.
632 | அரும்பெருஞ் சிலைக்கை வேட உரம்பெரி துடைமை காட்டி வரம்பெரி துடைய னாக்கி சரம்பொலி தூணி யீந்தார் |
4.065.4 |
பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய், ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன்தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர் செய்து, பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார்.
633 | இந்திரன் பிரம னங்கி மந்திர மறைய தோதி தந்திர மறியாத் தக்கன் சந்திரற் கருள்செய் தாருஞ் |
4.065.5 |
இந்திரன், பிரமன், அக்கினி, எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த, எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான்.
634 | ஆமலி பாலு நெய்யு பூமலி கொன்றை சூட்டப் கூர்மழு வொன்றா லோச்சக் தாமநற் சண்டிக் கீந்தார் |
4.065.6 |
பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைச் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட, அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே, அவரை சண்டீசன் ஆக்கித் தாம் சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான்.
635 | மையறு மனத்த னாய ஐயமி லமர ரேத்த வையக நௌயப் பாய்வான் தையலைச் சடையி லேற்றார் |
4.065.7 |
குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில், சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற, ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ்வுலகமே நௌயுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான்.
636 | குவப்பெருந் தடக்கை வேடன் துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் உவப்பெருங் குருதி சோர தவப்பெருந் தேவு செய்தார் |
4.065.8 |
திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார், ஒரு கையில் வளைந்த வில்லும், மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப்பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப்பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க, அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய, ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே, திண்ணனாரை மிகப்பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான்.
637 | நக்குலா மலர்பன் னூறு மிக்கபூ சனைகள் செய்வான் தொக்குமென் மலர்க்க ணென்றங் சக்கரங் கொடுப்பர்போலுஞ் |
4.065.9 |
விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம் கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான்.
638 | புயங்கமைஞ் ஞான்கும் பத்து சிவன்றிரு மலையைப் பேர்க்கத் வியன்பெற வெய்தி வீழ சயம்பெற நாம மீந்தார் |
4.065.10 |
இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க, அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச, அப்போது அவன் வலிமை நிலைவேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி, அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்கு இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார். புயங்கம் ஐந்நான்கும் - பாடம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.065.திருச்சாய்க்காடு , னாரே, அவன், பெருமான், சாய்க்காடு, மேவிய, உடைய, வழங்கினார், சிவபெருமான், தேவர்கள், திருமுறை, செய்து, அளவில், கொன்றை, கையில், சிவபெருமானுடைய, திருச்சாய்க்காடு, வழிபட்ட, வேண்டிய, மேம்பட்ட, அபிடேகம், ஆயிரம், சாய்க்காட்டுப், குருதி, அதனால், இராவணன், கொண்டு, தாமரைப், கண்ணில், இந்திரன், எழுந்த, தான், தேவாரப், கூற்றுவன், சிலந்தி, உறையும், வந்த, பெரிய, நான்காம், அவனுக்கு, பதிகங்கள், போர், திருச்சிற்றம்பலம், சாய்க்காட்டில்