நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.066.திருநாகேச்சரம்

4.066.திருநாகேச்சரம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
639 | கச்சைசேர ரரவர் போலுங் பிச்சைகொண் டுண்பர்போலும் இச்சையான் மலர்கள் தூவி நச்சுவார்க் கினியர்போலும் |
4.066.1 |
திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
640 | வேடுறு வேட ராகி காடுறு பதியர் போலுங் சேடெறி சடையர் போலுந் நாடறி புகழர் போலும் |
4.066.2 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.
641 | கற்றுணை வில்ல தாகக் பொற்றுணைப் பாதர் போலும் சொற்றுணை மாலை கொண்டு நற்றுணை யாவர் போலும் |
4.066.3 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க்கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
642 | கொம்பனாள் பாகர் போலுங் செம்பொனா ருருவர் போலுந் எம்பிரா னெம்மை யாளு நம்புவார்க் கன்பர்போலும் |
4.066.4 |
பார்வதி பாகராய். காளை எழுதிய கொடியினராய், செம்பொன் போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
643 | கடகரி யுரியர் போலுங் படவர வரையர் போலும் குடமுடை முழவ மார்ப்பக் நடநவி லடிகள் போலும் |
4.066.5 |
யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.
644 | பிறையுறு சடையர் போலும் மறையுறு மொழியர் போலும் முறைமுறை யமரர் கூடி நறவமர் கழலர் போலும் |
4.066.6 |
திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக்கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.
645 | வஞ்சகர்க் கரியர் போலும் குஞ்சரத் துரியர் போலுங் விஞ்சைய ரிரிய வன்று நஞ்சணி மிடற்றர் போலும் |
4.066.7 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணிகண்டராய் உள்ளார்.
646 | போகமார் மோடி கொங்கை வேகமார் விடையர் போலும் பாகமா லுடையர் போலும் நாகநா ணுடையர் போலும் |
4.066.8 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய, மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.
647 | கொக்கரை தாளம் வீணை அக்கரை யணிவர் போலும் வக்கரை யமர்வர் போலும் நக்கரை யுருவர் போலும் |
4.066.9 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
648 | வின்மையாற் புரங்கண் மூன்றும் தன்மையா லமரர் தங்க வன்மையான் மலையெ டுத்தான் நன்மையா லளிப்பர் போலும் |
4.066.10 |
திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.066.திருநாகேச்சரம் , னாரே, பெருமான், உள்ளார், திருநாகேச்சுரத்துப், உடையவராய், போலும்நாகவீச்சரவ, தம்மை, திருமுறை, திருநாகேச்சரம், நிகழ்த்தும், இடையில், பாம்பினை, கூத்து, தாளம், தேவர்கள், கொக்கரை, போர்த்தவராய், திருநாகேச்சுரப், தலைவராய், அம்பு, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், சடையர், எய்து, போலும்நாகவீச், திருவடிகளை, கொண்டு, யானைத்தோலைப்