நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.060.திருப்பெருவேளூர்

4.060.திருப்பெருவேளூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர்.
தேவியார் - மின்னனையாளம்மை.
578 | மறையணி நாவி னானை கறையணி கண்டன் றன்னைக் பிறையணி சடையி னானைப் நறையணி மலர்கள் தூவி |
4.060.1 |
வேதம் ஓதும் நாவினராய், தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய், நீலகண்டராய், ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய், பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் வணங்குவேன் நான்.
579 | நாதனா யுலக மெல்லா பாதனாம் பரம யோகி பேதனாய்த் தோன்றி னானைப் ஓதநா வுடைய னாகி |
4.060.2 |
தலைவனாய், உலகிலுள்ளார் எல்லாம் நம்முடைய பெருமான் என்று கூறுமாறு நிலைபெற்ற திருவடிகளை உடைய மேம்பட்ட யோகியாய், பலவகையாலும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பலவேடமும் தரித்துக் கொண்டு தோன்றுபவனாய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைத் தோத்திரிக்கும் நாவினை உடையேனாகிச் சான்றோர் உரைக்கும் வகையிலே உரைத்தலை உடையேன் நான்.
580 | குறவிதோண் மணந்த செல்வக் நறவிள நறுமென் கூந்த பிறவியை மாற்று வானைப் உறவினால் வல்ல னாகி |
4.060.3 |
குறத்தியாகிய வள்ளியின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரவேளுடைய தந்தையாராய், என்றும் மணமுள்ள கூவிளம் பூவை அணிந்த நறிய மெல்லிய கூந்தலை உடைய இளைய நங்கையாகிய பார்வதி பாகராய்ப் பிறவிப் பிணியைப் போக்குபவராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை அவரிடத்து அடியேன் கொண்ட உறவினால் உணர்ந்த வண்ணம் உணர்த்துவேன் நான்.
581 | மைஞ்ஞவில் கண்டன் றன்னை கைஞ்ஞவின் மானி னோடுங் பிஞ்ஞகன் றன்னை யந்தண் பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் |
4.060.4 |
நஞ்சுண்ட கருமை படர்ந்த நீல கண்டனாய், வலக்கையில் ஒரு மழுவை ஏந்தி, இடக்கையிற் பொருந்திய மானோடு ஒளி வீசும் தீயிடை ஆடுபவனாய், தலைக்கோலம் அணிந்தவனாய், அழகிய பெருவேளூரில் விரும்பி உறையும் பெருமானைப் பொய்ம்மை நீங்க நினைக்க இயலேனாய் நினைதற்காம் நல்வினையும் அறிவும் இல்லாதவன் நான்.
582 | ஓடைசேர் நெற்றி யானை வீடதே காட்டு வானை பேடைசேர் புறவ நீங்காப் கூடநான் வல்ல மாற்றங் |
4.060.5 |
நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவராய், அடியார்களுக்கு வீடுபேறு வழங்குபவராய், நான்கு வேத வடிவினராய், பேடையொடு கூடிய புறாக்கள் நீங்காது உறையும் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைக் கூடவல்ல, உலகியலுக்கு மாறுபட்ட வழியாகிய இறை நெறியிலே சென்று அவனை நெருங்கும் முறையை அறியேன்.
583 | கச்சைசேர் நாகத் தானைக் கச்சியே கம்பன் றன்னைக் பிச்சைசேர்ந் துழல்வினானைப் இச்சைசேர்ந் தமர நானு |
4.060.6 |
நாகத்தைக் கச்சாக அணிந்து; கடல் விடத்தைக் கழுத்தில் இருத்தி, காஞ்சியில் ஏகம்பத்தில் உறைபவராய், ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்துபவராய், பிச்சை எடுப்பதற்கு அலைபவராய், பெருவேளூரை விரும்பித் தங்கும் பெருமானை என் இச்சை நிறைவுற வழிபடும் வழியாலே வழிபடுவேன் நான்.
584 | சித்தராய் வந்து தன்னைத் முத்தனை மூர்த்தி யாய பித்தனைப் பிறரு மேத்தப் மெத்தநே யவனை நாளும் |
4.060.7 |
ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய், ஞானமூர்த்தியாகிய முதல்வராய், எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய், மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பியமிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பும் திறத்தை அறியாதேன் நான்.
585 | முண்டமே தாங்கி னானை வண்டுலாங் கொன்றை மாலை பிண்டமே யாயி னானைப் அண்டமா மாதி யானை |
4.060.8 |
தலைமாலையைப் பூண்டவராய், பூரண ஞானமுடையவராய், வண்டுகள் உலவும் கொன்றை மாலையையும் பிறையையும் முடிமாலையாக உடையவராய், என் உடலாகவும் உள்ளவராய்ப் பெருவேளூர்ப் பெருமானாய் எல்லா உலகங்களுமான முதற்கடவுளாய் உள்ள பெருமானை அறியும் வழியால் அறிய இயலாதேனாய் உள்ளேன் நான்.
586 | விரிவிலா வறிவி னார்கள் எரிவினாற் சொன்னா ரேனு பரிவினாற் பெரியோ ரேத்தும் மருவிநான் வாழ்த்தி யுய்யும் |
4.060.9 |
விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும். பெரியோர்கள் அன்போடு துதிக்கும் பெருவேளூர்ப் பெருமானைப் பொருந்தி அடியேன் வாழ்த்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான்.
587 | பொருகட லிலங்கை மன்ன கருகிய கண்டத் தானைக் பெருகிய சடையி னானைப் உருகிய வடிய ரேத்து |
4.060.10 |
அலைகள் மோதும் கடலிடை அமைந்த இலங்கை மன்னனாகிய இராவணனுடைய உடல் நசுங்குமாறு தம் கால்விரலை அழுத்தியவராய், நல்ல நீலகண்டராய், ஒளிவீசும் பிறையைச் சூடும்பரந்த சடையினராய்ப் பெரு வேளூரில் உள்ள பெருமானாரை மனம் உருகிய அடியவர்கள் போற்றும் உள்ளத்தை அடியேனும் பக்குவத்தால் பெற்று அப்பெருமானை விருப்புற்று நினைப்பேன் நான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.060.திருப்பெருவேளூர் , நான், பெருவேளூரை, உறையும், பெருமானை, விரும்பி, னானைப்பெருவேளூர், ஒளிவீசும், திருமுறை, அணிந்த, திருப்பெருவேளூர், வேனே, பிறவிப், அடியேன், றறிகிலேனே, லேனே, பெருமானைப், வந்து, உள்ள, விருப்புற்று, பெருவேளூர்ப், கொன்றை, வல்ல, எல்லா, வழங்குபவராய், நான்காம், நீலகண்டராய், கூத்து, சடையி, றன்னைக்கனலெரி, கண்டன், நிகழ்த்துபவராய், சடையினராய்ப், திருவடிகளை, உடைய, திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், மணந்த