நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.059.திருஅவளிவணல்லூர்

4.059.திருஅவளிவணல்லூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
568 | தோற்றினா னெயிறு கவ்வித் தேற்றுவான் சென்று சொல்லச் வீற்றினை யுடைய னாகி ஆற்றலை யழிக்க வல்லா |
4.059.1 |
தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல, தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
569 | வெம்பினா ரரக்க ரெல்லா செம்பினா லெடுத்த கோயில் நம்பினா ரென்று சொல்லி அம்பினா லழிய வெய்தா |
4.059.2 |
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்தசெயல் பெரிய குற்றமாயிற்று. ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக, 'நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்' என்று விரும்பி நோக்கி, இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார்.
570 | கீழ்ப்படக் கருத லாமோ தோட்பெரு வலியி னாலே வேட்பட வைத்த வாறே ஆட்படக் கருதிப் புக்கா |
4.059.3 |
புகழாந் தன்மை என்மாட்டு இருக்குமாயின் எந்நிலையிலும் அப்புகழ் கீழ்ப்பட நினைக்கலாமோ? 'என் தோள் வலிமையாலே இம்மலையை இடம் பெயர வைக்கிறேன்' என்று தன் விருப்பம் நிறைவேற இராவணன் செயற்பட்ட அளவிலே அவன் நடுநடுங்கி விழுந்து அடியவனாகுமாறு கருதி விரலால் அழுத்திய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
571 | நிலைவலம் வல்ல னல்ல சிலைவலங் கொண்ட செல்வன் தலைவலங் கருதிப் புக்குத் அலைகுலை யாக்கு வித்தா |
4.059.4 |
நிலைத்த வெற்றியை அடையவல்லவன் அல்லனாய், நேர்மையை நினைக்காமல், வில்லின் வெற்றியைக் கொண்ட செல்வராய தம்முடைய கயிலைமலையைத் தலைகளின் வலிமையை நினைத்துப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அன்று உடல் வருந்திச் குலையக் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
572 | தவ்வலி யொன்ற னாகித் மெய்வ்வலி யுடைய னென்று செவ்வலி கூர்வி ழி(ய்)யாற் அவ்வலி தீர்க்க வல்லா |
4.059.5 |
குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கினாலே தன்னை உண்மையான வலிமை உடையவன் என்று கருதி மிகப் பெரிய தேரை ஊர்ந்து சென்று சிவந்த கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை நோக்கித் தன் பத்துத் தலைகளாலும் அதனைத் தூக்க முற்பட்ட இராவணனுடைய வலிமையைப் போக்கிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
573 | நன்மைதா னறிய மாட்டா வன்மையே கருதிச் சென்று கன்மையான் மலையை யோடிக் அம்மையோ வென்ன வைத்தா |
4.059.6 |
நியாய உணர்வில்லாத இராவணன் தனக்கு நன்மையாவது இன்னது என்று அறிய இயலாதவனாய், தன் உடல் வலிமையையே பெரியதாகக் கருதித் தன் வலிமையைச் செயற்படுத்த முற்பட்டு, கல்லாந் தன்மையுடைய மலையை ஓடிச்சென்று தூக்கமுற்பட்டு வருந்தி, வாயினால் அம்மையோ என்று அலற வைத்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகிறார்.
574 | கதம்படப் போது வார்கள் சிதம்பட நின்ற நீர்கள் மதம்படு மனத்த னாகி அதம்பழத் துருவு செய்தா |
4.059.7 |
'சிவபெருமான் வெகுளும் வகையில் அவனை எதிர்த்துச் செயற்படுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தால் இதற்கு முன் எல்லாச் செயல்களிலும் வெற்றியையே அடைந்த தாங்கள் தோல்வி தரக்கூடிய இச்செயலைத் தவிர்த்து விடுங்கள்' என்ற தேரோட்டி சொல்லை மதியாது செருக்குக் கொண்ட மனத்தினனாய்த் தன் உடல் வன்மையால் கயிலையைப் பெயர்க்க மிகவும் முயல, அவ்விராவணன் உடம்பை அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நசிந்தும் போகுமாறு செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
575 | நாடுமிக் குழிதர் கின்ற ஓடுமிக்கென்று சொல்லி பாடிமிக் குய்வ னென்று ஆடுமிக் கரவம் பூண்டா |
4.059.8 |
பலநாடுகளிலும் சுற்றித் திரிந்த நியாய உணர்வில்லாத இராவணனை இவ்விடத்தை விட்டு விரைந்தோடு என்று அதட்டிக் கால்விரல் நகத்தினாலே அவனை ஊன்ற, நசுங்கிய அவன் மிகுதியாகப் பாடி உயிர் பிழைப்பேன் என்று எண்ணி பாடிப் பணிய அவனுக்குப் பலநன்மைகளைச் செய்தவராய்ப் படமெடுத்து ஆடும் பாம்புகளை மிகுதியாக அணிந்தவராகிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
576 | ஏனமா யிடந்த மாலு ஞானந்தா னுடைய ராகி சேனந்தா னிலாவ ரக்கன் ஆனந்த வருள்கள் செய்தா |
4.059.9 |
பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும், அழகிய தாமரையில் உறையும் பிரமனும் ஞானம் உடையவராய்த் தமக்கு நன்மை எது என்று அறியமாட்டாதவராய் இருந்தனர். பருந்துபோலப் பல இடங்களிலும் உலாவும் தன்மையை உள்ள இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க அவனை அழுத்திப் பின் அவனுக்கு மகிழ்ச்சி தரும் அருள்களைச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
577 | ஊக்கினான் மலையை யோடி தாக்கினான் விரலி னாலே நோக்கினா னஞ்சத் தன்னை ஆக்கினா ரமுத மாக |
4.059.10 |
ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத்தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.059.திருஅவளிவணல்லூர் , அவளிவணல்லூரில், ணல்லூராரே, பெருமான், உறைகின்றார், அவன், அவனை, இராவணன், பெயர்க்க, கொண்ட, சென்று, திருமுறை, கயிலையைப், முற்பட்ட, உடல், மலையை, செய்த, திருஅவளிவணல்லூர், ராரே, வலிமையை, உணர்வில்லாத, இராவணனை, பின், செய்தாரவளிவ, நியாய, ணல்லூ, அழுத்திப், பெரிய, யுடைய, வல்லாரவளிவ, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், போது, தேரோட்டி, வைத்த, கருதிப், நன்மை, உறுதியாக, அவனுடைய, கருதி