நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.058.திருப்பருப்பதம்
4.058.திருப்பருப்பதம்
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர்.
தேவியார் - மனோன்மணியம்மை.
558 | கன்றினார் புரங்கண் மூன்றுங் நின்றதோ ருருவந் தன்னா ஒன்றியாங் குமையுந் தாமு பன்றிப்பின் வேட ராகிப் |
4.058.1 |
தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து, தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும்அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார்.அப்பெருமான் திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக்கொண்டார்.
559 | கற்றமா மறைகள் பாடிக் வற்றலோர் தலைகை யேந்தி முற்றவோர் சடையி னீரை பற்றினார்க் கருள்கள் செய்து |
4.058.2 |
முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி, வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய், மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி, தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார். (காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது.)
560 | கரவிலா மனத்த ராகிக் இரவுநின் றெரிய தாடி மருவலார் புரங்கண் மூன்று பரவுவார்க் கருள்கள் செய்து |
4.058.3 |
இரவிலே தீயில் நின்று ஆடுபவராய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய், வஞ்சனையில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப்பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.
561 | கட்டிட்ட தலைகை யேந்திக் சுட்டிட்ட நீறு பூசிக் விட்டிட்ட வேட்கை யார்க்கு பட்டிட்ட வுடைய ராகிப் |
4.058.4 |
பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி, ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி, சாம்பலைப்பூசி, சுடுகாட்டில் தங்குபவராகி, உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையைஅணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே.
562 | கையராய்க்கபால மேந்திக் மெய்யராய் மேனி தன்மேல் உய்வரா யுள்கு வார்கட் பையரா வரையி லார்த்துப் |
4.058.5 |
மண்டையோட்டை ஏந்திய கையினராய், மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி, வடிவை எடுத்துக் கொண்டவராய், உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி, தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செயல்களைச் செய்து, படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார்.
563 | வேடராய் வெய்ய ராகி ஓடரா யுலக மெல்லா காடராய்க் கனல்கை யேந்திக் பாடராய்ப் பூதஞ் சூழப் |
4.058.6 |
பெருமான், அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய், கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து, மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய், உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து, கையில் தீயை ஏந்தி, விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார்.
564 | மேகம்போன் மிடற்ற ராகி ஏகம்ப மேவி னார்தா காகம்பர் கழற ராகிக் பாகம்பெண் ணுருவ மானார் |
4.058.7 |
கார்மேகம் போன்ற நீலகண்டராய், யானையின் தோலைப் போர்த்து, ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய், தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ, அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார்.
565 | பேரிடர்ப் பிணிக டீர்க்கும் காருடைக் கண்ட ராகிக் சீருடைச் செங்கண் வெள்ளே பாரிடம் பாணி செய்யப் |
4.058.8 |
பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும், தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான், நீலகண்டராய், ஒரு கையில்மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்தகண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார்.
566 | அங்கண்மா லுடைய ராய உங்கண்மால் தீர வேண்டி செங்கண்மால் பரவி யேத்திச் பைங்கண்வெள் ளேற தேறிப் |
4.058.9 |
சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப்புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார். உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்குதலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள்.
567 | அடல்விடை யூர்தி யாகி கடலிடை நஞ்ச முண்ட சுடர்விடு மேனி தன்மேற் படர்சடை மதியஞ் சேர்த்திப் |
4.058.10 |
வலிய காளையை வாகனமாகக் கொண்டு, இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி, கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திருமேனியின் மீது திருநீற்றை அணிந்து, பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.058.திருப்பருப்பதம் , நோக்கினாரே, பெருமான், நோக்கினார், பருப்பதம், உடைய, ஏந்தி, திருப்பருப்பதம், காளையை, கையில், திருமுறை, முன்நின்று, செய்து, திருப்பருப்பதத்தைத், பதிகங்கள், மண்டையோட்டை, னாரே, மேனி, நோக்கி, தேவாரப், பூதங்கள், நான்காம், கண்களை, பெரிய, நீலகண்டராய், திருச்சிற்றம்பலம், ஊர்ந்து, புரங்கண், தலைகை, தேவர்கள், கற்ற, தாம், செய்துபருப்பத, பின், உறைவிடமாகக், ராகிப்பருப்பத, கருள்கள், அருள்கள், தீயில், கொண்டார், சுடுகாட்டில்