நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.057.திருஆவடுதுறை

4.057.திருஆவடுதுறை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
548 | மஞ்சனே மணியு மானாய் நெஞ்சுளே புகுந்து நின்று துஞ்சும்போ தாக வந்து அஞ்சலென் றருள வேண்டும் |
4.057.1 |
ஆவடுதுறைப் பெருமானே! வலிமை உடையவனே! மணியே! மரகதமணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று நீ அருள் செய்யவேண்டும்.
549 | நானுகந் துன்னை நாளும் ஊனுகந் தோம்பு நாயே தானுகந் தேயு கந்த ஆனுகந் தேறு வானே |
4.057.2 |
காளையை விரும்பி ஏறிஊர்பவனே! ஆவடுதுறைப் பெருமானே! நான் விரும்பி உன்னை அணுகி வரக் கருதியபோதும், உடம்பையே விரும்பிப் பாதுகாக்கும் அடியேனுடைய உட்புறத்தில் நிலையாக நிற்கும் ஐம்பொறிகளும் விரும்புவனவற்றையே யானும் விரும்பிச் செயற்பட்டுஉன் தொண்டன் என்று கூறும் தகுதியற்றவனாய் உள்ளேன்.
550 | கட்டமே வினைக ளான ஒட்டவே யொட்டி நாளு பட்டவான் றலைகை யேந்திப் அட்டமா வுருவி னானே |
4.057.3 |
தன் பரிசழிந்த பெரிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை எடுத்து ஊர்கள்தோறும் திரிந்தவனாய்உள்ள அட்ட மூர்த்தியாம் ஆவடுதுறைப் பெருமானே! அடியேன் துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து, உனக்கு அடியவனாய், நீ அருட் கண்ணால்நோக்கி அடியேன் உயிரோடு ஒட்டும்படியே, அடியேனும் உன்னோடு ஒட்டி நாளும் உன்னைத் தியானித்தலைச் செய்ய இயலாதேனாய் உள்ளேன்.
551 | பெருமைநன் றுடைய தில்லை ஒருமையா லுன்னை யுள்கி கருமையிட் டாய வூனைக் அருமையா நஞ்ச முண்ட |
4.057.4 |
பெருமைகளை மிகுதியாக உள்ள தில்லைத் திருத்தலத்தைப் பற்றிப் பேசி நல்வினையைத் தேடிக் கொள்ளமாட்டேன். ஒருமைப்பட்ட உள்ளத்தாலே உன்னை நினைத்து உகந்து பேசி வீட்டுலகை அடையமாட்டேன். ஆணவச் சார்பால் எய்திய உடம்பைத் துயரத்திலேயே கழிக்கின்றேன். நுகர்தற்கு அரிய விடத்தை உண்டு அருளிய ஆவடுதுறைப் பெருமானே! அடியேற்கு அருளுக.
552 | துட்டனாய் வினைய தென்னுஞ் கட்டனா வைவர் வந்து மட்டவிழ் கோதை தன்னை அட்டமா நாக மாட்டும் |
4.057.5 |
நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை மகிழ்வோடு ஒரு பாகமாக்கொண்டு எட்டுப்பெரிய பாம்புகளை ஆட்டுகின்ற ஆவடுதுறைப் பெருமானே! கொடியவனாய் வினை என்று சுழியில் அகப்பட்ட என்னைப் பாசத்தை உடையேனாக ஐம்பொறிகள் கலக்க முடியாதபடி பாதுகாத்து உன் அடியவனாகக் கொள்வாயாக.
553 | காரழல் கண்டமே யாய்க் ஓரழ லம்பி னாலே நீரழற் சடையு ளானே ஆரழ லேந்தி யாடு |
4.057.6 |
கரிய நெருப்பைப் போன்ற விடத்தை கழுத்தில் இருத்தி, பெரிய மதில்களை உடைய முப்புரங்களையும் ஒரு தீ அம்பைச் செலுத்தித் தீயினால் எரியுமாறு செய்து, கங்கையைத் தீப்போன்ற சடையில் வைத்துத் தன்னை விரும்பும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனாய் அரிய நெருப்பை உள்ளங்கையில் ஏந்திக் கூத்து நிகழ்த்தும் ஆவடுதுறைப் பெருமானே!
554 | செறிவிலேன் சிந்தை யுள்ளே குறியிலேன் குணமொன் றில்லேன் நெறிபடு மதியொன் றில்லே அறிவிலே னயர்த்துப் போனே |
4.057.7 |
ஆவடுதுறைப் பெருமானே! மனத்திலே அலைதல் இன்றி செறிவு இல்லாதேனாய்ச் சிவன் அடிகளை அறிய மாட்டேனாய்க் குறிக்கோள் இன்றி நற்பண்பின்றிப் பெரியோர்கள் கூறும் வழியிலே உன் புகழைச் சொல்ல மாட்டாதேனாய் நல்வழியில் செல்லும் அறிவில்லேனாய் நினைக்க வேண்டியவழியிலே நினைக்க மாட்டேனாய் இவ்வாறு உண்மை அறிவு இன்மையால் புல்லறிவினால் மயங்கிப் போயினேன்.
555 | கோலமா மங்கை தன்னைக் சீலமே யறிய மாட்டேன் ஞாலமா மிதனு ளென்னை ஆலமா நஞ்ச முண்ட |
4.057.8 |
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறைப் பெருமானே! அழகிய பார்வதி பாகனான அழகினை உடைய உன் தன்மையை அறிய மாட்டேனாய் யான் செய்யும் இருவினையும் என்னைப் பிணித்து இவ்வுலகப் பாசத்துள் என்னை வருத்தாத வகையில் அடியேனை விரும்பிப் பாதுகாப்பாயாக.
556 | நெடியவன் மலரி னானுந் கடியதோ ருருவ மாகிக் வடிவின வண்ண மென்றே அடியனே னெஞ்சி னுள்ளார் |
4.057.9 |
திருமாலும் பிரமனும் தம்முள் உடன்பட்டு அடியும் முடியும் தேடுமாறு விரைவில் தீத்தம்பமாய் நின்றதன் வடிவமும் தன் நிறமும் இன்ன என்று தம்மால் பேச இயலாதாராக அவ்விருவரும் இருக்க ஆவடுதுறைப் பெருமான் அடியேன் உள்ளத்துள்ளே நிலையாக வீற்றிருக்கிறான்.
557 | மலைக்குநே ராய ரக்கன் தலைக்குமேற் கைக ளாலே வுலப்பிலா விரலா லூன்றி அலைத்தவான் கங்கை சூடும் |
4.057.10 |
கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம்மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து, அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.057.திருஆவடுதுறை , ஆவடுதுறைப், பெருமானே, துறையுளானே, துறையு, ளானே, விடத்தை, உன்னை, உடைய, அடியேன், திருமுறை, திருஆவடுதுறை, அரிய, நஞ்ச, என்னைப், பேசி, இன்றி, நினைக்க, மாட்டேனாய், அறிய, பெருமான், பார்வதி, சடையில், விரும்பிப், புகுந்து, வலிமை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், அடியேனுடைய, யான், கூறும், உள்ளேன், நிலையாக, விரும்பி, அருள், பெரிய