நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.056.திருஆவடுதுறை

4.056.திருஆவடுதுறை
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
538 | மாயிரு ஞால மெல்லா பாயிருங் கங்கை யாளைப் காயிரும் பொழில்கள் சூழ்ந்த ஆயிரங் கொடுப்பர் போலும் |
4.056.1 |
ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர். அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர். மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர்.
539 | மடந்தைபா கத்தர் போலும் குடந்தையிற் குழகர் போலுங் கடைந்தநஞ் சுண்பர் போலுங் அடைந்தவர்க் கன்பர் போலும் |
4.056.2 |
பார்வதி பாகராய், மான்குட்டியை ஏந்திய கையினராய், கும்பகோணப்பதியில் இளையவராய், தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய், கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்டவராய், கூற்றுவனை வெகுண்டவராய்த் தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடுதுறையனார்.
540 | உற்றநோய் தீர்ப்பர் போலும் செற்றவர் புரங்கண் மூன்றுந் கற்றவர் பரவி யேத்திக் அற்றவர்க் கன்பர் போலும் |
4.056.3 |
அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் அவர்களுக்கு மேம்பாடான துணைவராய், பகைத்த அசுரரின் மும்மதில்களையும் தீக்கிரையாக்கியவராய், ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்ற கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடிவந்து அலந்து பாடுவோராய்த் தம்மிடமே அற்றுத் தீர்ந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறையனார்.
541 | மழுவமர் கையர் போலும் எழுநுனை வேலர் போலும் தொழுதெழுந் தாடிப் பாடித் அழுமவர்க் கன்பர் போலும் |
4.056.4 |
கையில் மழுப்படையை ஏந்தியவராய், பார்வதி பாகராய், கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய், எலும்பினை மாலையாக அணிபவராய், தொழுது எழுந்து ஆடிப்பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
542 | பொடியணி மெய்யர் போலும் கடியதோர் விடையர் போலுங் வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர் அடிமையை 1ஆள்வர் போலும ஆவடு துறைய னாரே. |
4.056.5 |
நீறணிந்த மேனியராய், ஒளி வீசும் வெள்ளிய பூணூலை அணிந்தவராய், விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய், மன்மதனை வெகுண்டவராய், சூட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய், விருப்பத்தோடு முன்நின்று துதிக்கும் அடியவர்களுடைய அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
543 | வக்கர னுயிரை வவ்வக் சக்கரங் கொடுப்பர் போலுந் துக்கமா மூடர் தம்மைத் அக்கரை யார்ப்பர் போலும் |
4.056.6 |
வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய், தானம் புரிபவர்களுக்குத் தலைவராய், அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய், அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
544 | விடைதரு கொடியர் போலும் படைதரு மழுவர் போலும் உடைதரு கீளர் போலும் அடைபவ ரிடர்க டீர்க்கும் |
4.056.7 |
காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய், வெள்ளிய பூணூலை அணிந்தவராய், மழுப்படையை ஏந்தியவராய், பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய், கீள் உடையை அணிபவராய், உலகங்களை ஆள்பவராய், தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
545 | முந்திவா னோர்கள் வந்து நந்திமா காள ரென்பார் சிந்தியா தேயொ ழிந்தார் அந்திவான் மதியஞ் சூடும் |
4.056.8 |
மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான், முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க, சிவபாதங்களைத்தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்திமாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்.
546 | பானம ரேன மாகிப் தேனமர்ந் தேறு மல்லித் தீனரைத் தியக் கறுத்த ஆனரை யேற்றர் போலும் |
4.056.9 |
தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும், தேன்மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம்தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய், வெண்ணிறக் காளை வாகனமுடையவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான்.
547 | பார்த்தனுக் கருள்வர் போலும் ஏத்துவா ரிடர்கள் தீர கூத்தராய்ப் பாடி யாடிக் ஆர்த்தவா யலறு விப்பார் |
4.056.10 |
ஆவடுதுறைப் பெருமானார் அருச்சுனனுக்கு அருள் புரிந்தவராய், விரிந்து பரவிய சடைமுடியை உடையவராய், தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர அவர்களுக்கு இன்பம் நல்குபவராய், கூத்தாடுபவராய்ப் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார். அவர், கொடிய வலிமையை உடைய இராவணனை, அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலைமலையைப் பெயர்க்கவந்த அளவில், அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் அலறுமாறு செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.056.திருஆவடுதுறை , னாரே, துறைய, ஆவடுதுறைப், பெருமான், போலும்ஆவடு, உள்ளார், தம்மை, காளை, அணிபவராய், கன்பர், திருமுறை, திருஆவடுதுறை, அன்பராய், ஏந்தியவராய், உடையவராய், பெரிய, மழுப்படையை, வெள்ளிய, கொண்டு, அணிந்தவராய், பூணூலை, மும்மதில்களையும், உடைய, உடுத்தவராய், திருச்சிற்றம்பலம், கொடுப்பர், பதிகங்கள், தேவாரப், நான்காம், பரவிய, கையர், பாகராய், ஆவடுதுறையனார், பார்வதி, காய்வர், தோலர், அவர்களுக்கு