நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.055.திருவலம்புரம்

4.055.திருவலம்புரம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர்.
தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
528 | தெண்டிரை தேங்கியோ தஞ் தொண்டிரைத் தண்டர் கோனைத் வண்டுகண் மதுக்கண் மாந்தும் கொண்டுநற் கீதம் பாடக் |
4.055.1 |
எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தௌந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது, தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும், தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே!
529 | மடுக்களில் வாளை பாய பிடிக்களி றென்னத் தம்மிற் தொடுத்தநன் மாலை யேந்தித் வடித்தடங் கண்ணி பாகர் |
4.055.2 |
மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர், மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே, தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே!
530 | தேனுடை மலர்கள் கொண்டு ஆனிடை யஞ்சுங் கொண்டே வானிடை மதியஞ் சூடும் நானடைந் தேத்தப் பெற்று |
4.055.3 |
தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன்.
531 | முளையெயிற் றிளநல் லேனம் வளையெயிற் றிளைய நாகம் 1புளைகயப் போர்வை போர்த்துப் வளைபயி லிளைய ரேத்தும் |
4.055.4 |
வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு, செறிந்த சடைகள் தாழ, வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி, துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து, கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார்.
532 | சுருளுறு வரையின் மேலாற் இருளுறு கதிர்நு ழைந்த அருளுறு மடிய ரெல்லா மருளுறு கீதங் கேட்டார் |
4.055.5 |
இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன், மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க, அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார்.
533 | நினைக்கின்றே னெஞ்சு தன்னா அனைத்துடன் கொண்டு வந்தங் புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை எனக்குநான் செய்வ தென்னே |
4.055.6 |
நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன், அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன். இனி, யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன்.
534 | செங்கயல் சேல்கள் பாய்ந்து தங்கயந் துறந்து போந்து கொங்கையர் குடையுங் காலைக் மங்கல மனையின் மிக்கார் |
4.055.7 |
செங்கயல்களும், சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய், பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் (எம்) அடிகள்! (மிக்கு + ஆர் - மிக்கு நிறையும்.)
535 | அருகெலாங் குவளை செந்நெல் தெருவெலாந் தெங்கு மாவும் குருகினங் கூடி யாங்கே மருவலா மிடங்கள் காட்டும் |
4.055.8 |
ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன. தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன. மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன. அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன. இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார்.
536 | கருவரை யனைய மேனிக் திருவரை யனைய பூமேற் ஒருவரை யுச்சி யேறி அருமையி லௌமை யானா |
4.055.9 |
கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும், திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாத வராய், ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார்.
537 | வாளெயி றிலங்க நக்கு ஆள்வலி கருதிச் சென்ற தோளொடு பத்து வாயுந் ஆண்மையும் வலியுந் தீர்ப்பா |
4.055.10 |
தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் (தலைகள்) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு, சிரித்துக் கொண்டே, தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.055.திருவலம்புரம் , கொண்டு, தடிக, உடைய, புரவ, ளாரே, வந்து, திருமுறை, திருவலம்புரம், அவர், பொருந்த, பளிங்கு, மகளிர், தமது, நிறையும், னவனுங், னாரே, உறையும், யனைய, கூடி, பற்களை, மிக்கு, குவளை, உள்ளார், அழகிய, வாறே, பெருமான், தம்மை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், வண்ணம், வாளை, மதியஞ், வலம்புரத்துப், அடியேன், அடியார்கள், சான்ற, பெரிய, மீன்கள், அடைந்து