நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.048.திருஆப்பாடி

4.048.திருஆப்பாடி
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
466 | கடலக மேழி னோடும் உடலகத் துயிரும் பாரு தடமலர்க் கந்த மாலை மடலவிழ் கொன்றை சூடி |
4.048.1 |
ஏழு கடலும் காற்றும் விண்ணும், உடல்களில் உள்ள உயிர்களும், உலகமும், தீயும் ஆகிநின்று, பெரியமலர்கள் மணம் வீசும் மாலைக்காலமும், குளிர்ந்த சந்திரன் ஒளிவிடும் இரவும், சூரியன் ஒளிவிடும் பகற்காலமும் ஆகி, நிலைபெற்று நின்ற ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார்.
467 | ஆதியு மறிவு மாகி சோதியுட் சுடரு மாகித் பாதியிற் பெண்ணு மாகிப் வேதியர் வாழுஞ் சேய்ஞல் |
4.048.2 |
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிந்திருப்பவராய், ஒளியை உட்கொண்ட ஞானச்சுடராய், தூய வழிக்குச் செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய், வழிபடுபவர்களுக்குத் துணைவராய் வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார்.
468 | எண்ணுடை யிருக்கு மாகி பண்ணொடு பாட றன்னைப் கண்ணொரு நெற்றி யாகிக் பெண்ணொரு பாக மாகிப் |
4.048.3 |
மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய், அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய், பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய், நெற்றிக்கண்ணராய், உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார்.
469 | அண்டமா ரமரர் கோமா கொண்டவன் குறிப்பி னாலே கண்டவன் றாதை பாய்வான் தண்டியார்க் கருள்கள் செய்த |
4.048.4 |
எல்லா உலகங்களுமாய், தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு, அப்பெருமான் குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர, விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார்.
470 | சிந்தையுந் தௌவு மாகித் வந்தநற் பயனு மாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த அந்தமோ டளவி லாத |
4.048.5 |
சிந்தித்தல், தௌதல், தௌவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை, இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய், முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார்.
471 | வன்னிவா ளரவு மத்த மின்னிய வுருவாஞ் சோதி கன்னியோர் பாக மாகிக் இன்னிசை தொண்டர் பாட |
4.048.6 |
வன்னி, ஒளிபொருந்திய பாம்பு, ஊமத்தை, பிறை, கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய், ஞானத்தின் பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய், தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய், இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு ஆப்பாடியார் இருக்கின்றார்.
472 | உள்ளுமாய்ப் புறமு மாகி வெள்ளமாய்க் கரையு மாகி கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் அள்ளுவார்க் கள்ளல் செய்திட் |
4.048.7 |
உள்ளும் புறமுமாய், அருவும் உருவுமாய், வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள் விரிகின்ற சூரியனாய், கள்ளமும் கள்ளத்து உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய், தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர் ஆப்பாடிப் பெருமான் ஆவார்.
473 | மயக்கமாய்த் தௌவு மாகி தியக்கமா யொருக்க மாகிச் இயக்கமா யிறுதி யாகி அயக்கமா யடக்க மாய |
4.048.8 |
மயக்கமும் தௌவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி, அசைவும் அசைவின்மையுமாகி, அடியவர் சிந்தையுள் பொருந்திநின்று, அதனை இயக்குபவராய், உலகுக்கெல்லாம் இறுதியாய், எண் திசைகளுக்கும் தலைவராய், நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும் அவித்தவராய், உள்ளவர் திருவாப்பாடிப் பெருமான் ஆவார்.
474 | ஆரழ லுருவ மாகி பேரொளி யுருவி னானைப் சீரவை பரவி யேத்திச் பேரரு ளருளிச் செய்வார் |
4.048.9 |
பெரிய தீத்தம்பத்தின் உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும் திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து, திருவடிகளை வணங்குபவருக்கு, ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான் பெருமளவில் அருள் செய்பவராவார்.
475 | திண்டிற லரக்க னோடிச் எண்டிற லிலனு மாகி விண்டிறல் நெரிய வூன்றி பண்டிறல் கேட் டுகந்த |
4.048.10 |
மிக்க உடல் வலிமையை உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட, அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்தபெருமான் திருஆப்பாடியார் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.048.திருஆப்பாடி , பாடி, யாரே, அவன், பெருமான், பார்வதி, அமைந்துள்ளார், திருமுறை, உடல், உறையும், திருஆப்பாடி, ஆவார், பயனு, திருவாப்பாடிப், தௌவு, பாகராய், பயனாகிய, உடைய, பெருமானைப், வலிமை, கடந்த, பெரிய, நான்காம், ஆப்பாடியை, திருவடிகளை, விரிகின்ற, பாங்க, ஆப்பாடியார், ஒளிவிடும், பதிகங்கள், உள்ள, உருவினராய், துணைவராய், திருச்சிற்றம்பலம், அப்பெருமான், தலைவராய், விரும்பி, தேவாரப், விசாரசருமன்