நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.049.திருக்குறுக்கை

4.049.திருக்குறுக்கை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
476 | ஆதியிற் பிரம னார்தா ஓதிய வேத நாவ சோதியுட் சுடராய்த் தோன்றிச் கோதிவண் டறையுஞ்சோலைக் |
4.049.1 |
ஆதிப்பிரமர் வண்டுகள் மலர்களைக் கோதி ஒலிக்கும்சோலைகளால் சூழப்பட்ட குறுக்கைவீரட்டனார் திருவடிக் கீழ் அர்ச்சனை செய்தார். வேதம் ஓதிய நாவினை உடைய பிரமனார் தம்மை வழிபாட்டால் உணருந்தன்மையைச் சிவபெருமான் உணர்ந்தவராவர். அப்பெருமான் சூரியன் முதலிய ஒளிப்பொருள்களுக்கு ஒளிதருபவராய் ஆரேனும் அமர்ந்திருந்து சொல்லும் நிலையைக் கடந்த பெருமையுடையவர்.
477 | நீற்றினை நிறையப் பூசி ஆற்றுநீர் பூரித் தாட்டு சாற்றுநா ளற்ற தென்று கூற்றினைக் குமைப்பர் போலுங் |
4.049.2 |
திருநீற்றை உடல்நிறையப் பூசி நாடோறும் செய் கடன்களைச்செய்து, காவிரி நீரை நிறைத்து அபிடேகம் செய்யும் மார்க்கண்டேயருக்குப் பிரமனால் குறிப்பிடப்பட்ட வாழ்நாள் முடிந்துவிட்டது என்று அவரைக் கொல்வதற்காகத் தருமராசருடைய ஆணைப்படி வந்த கூற்றுவனைக் குறுக்கை வீரட்டனார் தண்டித்தார்.
478 | தழைத்ததோ ராத்தி யின்கீழ் அழைத்தங்கே யாவின் பாலைக் பிழைத்ததன் தாதை தாளைப் குழைத்ததோ ரமுத மீந்தார் |
4.049.3 |
தழைகள் நிரம்பிய ஆத்தி மரத்தின் கீழே மணலால் இலிங்கம் அமைத்து எம்பெருமானை அவன் திருநாமங்களைக் கூறி அழைத்து விசாரசருமன் பசுவின் பாலைக் கறந்து கொண்டு அபிடேகம் செய்ததனைக் கண்டு தவறு செய்த தன்னுடைய தந்தையின் கால்களைப் பெரிய வளைந்த மழுவாயுதத்தால் வெட்ட அவ்விசாரசருமனுக்குக் குறுக்கை வீரட்டனார் சிவானந்தமாகிய அமுதத்தைக் குழைத்துக் கொடுத்துள்ளார்.
479 | சிலந்தியு மானைக் காவிற் உலந்தவ ணிறந்த போதே கலந்தநீர்க் காவிரீ சூழ் குலந்தனிற் பிறப்பித் திட்டார் |
4.049.4 |
திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்.
480 | ஏறுட னேழ டர்த்தா ஆறுடைச் சடையி னானை வேறுமோர் பூக்கு றைய கூறுமோ ராழி யீந்தார் |
4.049.5 |
ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின்கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
481 | கல்லினா லெறிந்து கஞ்சி நெல்லினார் சோறு ணாமே எல்லியாங் கெரிகையேந்தி கொல்லியாம் பண்ணுகந்தார் |
4.049.6 |
சிவபெருமான் மீது நாடோறும் ஒரு கல்லினை எறிந்த பின்னரே தாம் உண்ணும் நியமத்தைக் கொண்ட சாக்கிய நாயனார் இவ்வுலகிலிருந்து அரிசிச் சோறு உண்ணாமல் மேம்பட்ட வீட்டுலகை ஆளுமாறு செய்தவர், இரவிலே உள்ளங்கையில் தீயை ஏந்தி அழகிய கூத்து நிகழ்த்திக் கொல்லிப்பண்ணை விரும்பிப் பாடும் குறுக்கை வீரட்டனாராவர்.
482 | காப்பதோர் வில்லு மம்புங் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தீப்பெருங் கண்கள் செய்ய கோப்பதும் பற்றிக் கொண்டார் |
4.049.7 |
காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும், நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த, காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து, தூயவாயினில் நீரைக்கொண்டு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து, அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார்.
483 | நிறைமறைக் காடு தன்னில் கறைநிறத் தெலிதன் மூக்குச் நிறைகடன் மண்ணும் விண்ணும் குறைவறக் கொடுப்பர்போலுங் |
4.049.8 |
மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக் காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
484 | அணங்குமை பாக மாக வணங்குவா ரிடர்க டீர்க்கு கணம்புல்லர்க் கருள்கள் செய்து குணங்களைக் கொடுப்பர் போலுங் |
4.049.9 |
பார்வதியைப்பாகமாகத் தம் திருமேனியில் அடக்கிக் கொண்ட வடிவினராய், தம்மை வணங்குபவர்களுடைய துயரம் போக்கும் மருந்தாகியவராய், நல்ல மேம்பட்ட தவத்தை உடைய கணம்புல்ல நாயனாருக்கு அருள்கள் செய்து, தம்மிடம் அன்பு பூணும் அடியவர்களுக்கு, நல்ல பண்புகளை அருளுவார் குறுக்கை வீரட்டனார்.
485 | எடுத்தன னெழிற் கயிலை அடுத்தொரு விரலா லூன்ற விடுத்தனன் கைந்ந ரம்பால் கொடுத்தனர் கொற்ற வாணாள் |
4.049.10 |
கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து, செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட, அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.049.திருக்குறுக்கை , னாரே, குறுக்கை, ரட்ட, வீரட்டனார், பெரிய, திருக்குறுக்கை, அவன், திருமுறை, உடைய, சூழப்பட்ட, நல்ல, பெயர்த்து, வழங்கினார், சோறு, ஆளுமாறு, பெயர்க்க, நீண்ட, மற்றொரு, கையிலும், மேம்பட்ட, ஒன்றனைப், கொண்ட, கொண்டு, தம்மை, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், சிவபெருமான், போலுங்குறுக்கைவீ, அழகிய, நான்காம், அபிடேகம், நாடோறும், மறுபிறப்பில்