நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.044.திருஏகம்பம்

4.044.திருஏகம்பம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
434 | நம்பனை நகர மூன்று அம்பனை யமுதை யாற்றை கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செம்பொனைப் பவளத் தூணைச் |
4.044.1 |
நம்மால் விரும்பப்படுபவனாய், மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய், அமுதனாய் பேரின்ப பெருக்காறாய், அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய், ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன். (ஆறு - நெறி எனலுமாம்.)
435 | ஒருமுழ முள்ள குட்ட அரைமுழ மதன கல பெருமுழை வாய்தல் பற்றிக் கருமுகில் தவழு மாடக் |
4.044.2 |
கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன்.
436 | மலையினார் மகளோர் பாக சிலையினான் மதில்கண் மூன்றுந் இலையினார் சூல மேந்தி தலையினால் வணங்க வல்லார் |
4.044.3 |
பார்வதி பாகரான இளையராய், ஒற்றைமழுப்படையை ஏந்தியவராய், வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய், இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும்தலைவராகும் உயர் நிலையினராவர்.
437 | பூத்தபொற் கொன்றை மாலை தீர்த்தமாங் கங்கை யாளைத் ஏத்துவா ரேத்த நின்ற வாழ்த்துமா றறிய மாட்டேன் |
4.044.4 |
பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய், பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து, தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய், இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன்.
438 | மையினார் மலர்நெ டுங்கண் கையிலோர் கபால மேந்திக் எய்வதோ ரேன மோட்டி கையினாற் றொழவல் லார்க்குக் |
4.044.5 |
மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய், கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய், தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி, ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும்.
439 | தருவினை மருவுங் கங்கை அருவினை யகல நல்கு திருவினைத் திருவே கம்பஞ் உருவினை யுருகி யாங்கே |
4.044.6 |
சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய், எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய், தேவர்கள் போற்றும் செல்வமாய், திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய், உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன்.
440 | கொண்டதோர் கோல மாகிக் உண்டதோர் நஞ்ச மாகி எண்டிசை யோரு மேத்த கண்டுநா னடிமை செய்வான் |
4.044.7 |
தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய், உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன்.
441 | படமுடை யரவி னோடு கடமுடை யுரிவை மூடிக் இடமுடைக் கச்சி தன்னு நடமுடை யாடல் காண |
4.044.8 |
படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி, மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு, செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினையிலிருந்து பிழைத்தது. இது வியக்கத்தக்கது.
442 | பொன்றிகழ் கொன்றை மாலை நன்றியிற் புகுந்தெ னுள்ள குன்றியி லடுத்த மேனிக் இன்றுயில் போது கண்டா |
4.044.9 |
குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார். அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார்.
443 | துருத்தியார் பழனத் துள்ளார் அருத்தியா லன்பு செய்வா எருத்தினை யிசைய வேறி வருத்திநின் றடிமை செய்வார் |
4.044.10 |
அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத்துருத்தி, திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய், விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு, உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.044.திருஏகம்பம் , உடைய, மேவி, விரும்பி, ஏகம்பத்தை, உறையும், திருஏகம்பம், திருமுறை, றேனே, யான், கொன்றை, கங்கை, நான்காம், ஏந்தி, தேவாரப், வழிபடும், நினைத்து, கொண்ட, குளிர்ந்த, அடியவர், கொடிய, பிச்சை, கையில், பதிகங்கள், பிறையைச், சிவந்த, அழகிய, மும்மதில்களும், கச்சி, அணிந்த, கம்ப, திருச்சிற்றம்பலம், வணங்க, அடியேன், பெரிய, ஏகம்பம், செல்வராய்