நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.045.திருவொற்றியூர்

4.045.திருவொற்றியூர்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
444 | வெள்ளத்தைச் சடையில் வைத்த மௌளத்தா னடைய வேண்டின் கள்ளத்தைக் கழிய நின்றார் உள்ளத்து ளொளியு மாகு |
4.045.1 |
கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம்பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால், மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான்.
445 | வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா புசிப்பதோர் பொள்ள லாக்கை அசிர்ப்பெனு மருந்த வத்தா உசிர்ப்பெனு முணர்வு முள்ளா |
4.045.2 |
ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது, உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில், தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின், நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று, உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான்.
446 | தானத்தைச் செய்து வாழ்வான் வானத்தை வணங்க வேண்டில் ஞானத்தை விளக்கை யேற்றி ஊனத்தை யொழிப்பர் போலு |
4.045.3 |
பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள், சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.
447 | காமத்து ளழுந்தி நின்று சாமத்து வேத மாகி ஏமத்து மிடையி ராவு ஓமத்து ளொளிய தாகு |
4.045.4 |
உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான்.
448 | சமையமே லாறு மாகித் இமையவர் பரவி யேத்த கமையினை யுடைய ராகிக் உமையொரு பாகர் போலு |
4.045.5 |
அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க, அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும், எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய், பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான்.
449 | ஒருத்திதன் றலைச்சென் றாளைக் ஒருத்திக்கு நல்ல னாகி ஒருத்தியைப் பாகம் வைத்தா ஒருத்திக்கு நல்ல னல்ல |
4.045.6 |
ஒற்றியூர்ப்பெருமான். தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து, மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு, தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன்.
450 | பிணமுடை யுடலுக் காகப் புணர்வெனும் போகம் வேண்டா நிணமுடை நெஞ்சி னுள்ளா உணர்வினோ டிருப்பர் போலு |
4.045.7 |
பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க. போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க, கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார்.
451 | பின்னுவார் சடையான் றன்னைப் துன்னுவார் நரகந் தன்னுட் மன்னுவான் மறைக ளோதி உன்னுவா ருள்ளத் துள்ளா |
4.045.8 |
முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக.
452 | முள்குவார் போகம் வேண்டின் எள்குவா ரௌகி நின்றங் பள்குவார் பத்த ராகிப் உள்குவா ருள்ளத் துள்ளா |
4.045.9 |
நெஞ்சமே! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய், அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர். உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள். அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ்.
453 | வெறுத்துகப் புலன்க ளைந்தும் மறுத்துக வார்வச் செற்றக் பொறுத்துகப் புட்ப கத்தே ஒறுத்துகந் தருள்கள் செய்தா |
4.045.10 |
நெஞ்சே! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும். பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக. புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.045.திருவொற்றியூர் , ருடைய, கோவே, ஒற்றியூர்ப், பெருமான், உடைய, போலுமொற்றியூ, திருமுறை, திருவொற்றியூர், நீர், சடையில், ருள்ளத், அழியுமாறு, தியானிக்கும், போகம், நல்ல, மறைத்து, திரிந்து, துள்ளாரொற்றியூ, என்பதனை, தியானிப்பவர், உள்ளத்தில், அவர், ஒற்றியூர்ப்பெருமான், நிலை, பலகாலும், உணர்ந்து, அதனைத், தான்தோன்றி, கலந்து, கங்கையைச், பெருமானுடைய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், விரும்பினால், செய்து, காட்சி, செய்யும், வழிபடுபவர்களுக்கு, யாமங்களிலும், அருள், சயம்பு, நின்று