நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.027.திருவதிகைவீரட்டானம்
4.027.திருவதிகைவீரட்டானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
269 | மடக்கினார் புலியின் றோலை |
4.027.1 |
கெடிலநதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் புலியின்தோலை உடையாக உடம்பைச்சுற்றி இடையில் உடுத்துப் பெரிய முடிமணியை உடைய பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்தசடை மீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்தவாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் ஆவர்.
270 | சூடினார் கங்கை யாளைச் |
4.027.2 |
கங்கையாளை எம் பெருமான் சடையில் சூடினாராக அவ்வோசை கேட்டுப்பார்வதி ஊடினாளாக அவ்வூடலைப் போக்க வேண்டிக் கெடிலவேலி அதிகை வீரட்டனாராகிய பெருமானார் சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர்.
271 | கொம்பினார் குழைத்த வேனற் |
4.027.3 |
மரக்கிளைகள் தளிர்த்த வேனிற் காலத்திற்கு உரிய அரசனாகியமன் மதனை விடுத்த மால், அயன், இந்திரன் முதலோர் அவன் உருவினை மீண்டும் காண முடியாத வகையில் அவன் உடலைத் தீவிழித்து எரித்து வருத்தினார். அச்செயல் செய்த கெடில வேலி அதிகை வீரட்டனார் பகைவர்களுடைய மும்மதில்களையும் வில்லிடைக்கோத்து எரித்து அழித்த அம்பினை உடையவராவர்.
272 | மறிபடக் கிடந்த கையர் |
4.027.4 |
கெடில வீரட்டனார் கையில் மான் குட்டியை ஏந்தி, அழகுவளரும் இளையளாகிய பார்வதி பாகராய்ச் செறிந்த செஞ்சடையில் பிறையைச் சூடி, புள்ளிகளை உடையபாம்பு புகையைக் கக்கி வெகுளுமாறு அதனை இடையில்இறுகக்கட்டி, அடியார்களுடைய உள்ளத்திலே பொய்உணர்வு அழியும்படியாக உலவி வருகிறார்.
273 | நரிவரால் கவ்வச் சென்று வரிவரா லுகளுந் தெண்ணீர்க் அரிவரால் வயல்கள் சூழ்ந்த |
4.027.5 |
கோடுகளை உடைய வரால் மீன்கள் தாவும் தௌந்த நீரை உடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நாற்புறமும் எல்லையாகக் கொண்டு நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களை உடைத்தாய அதிகையின் வீரட்டனார், நரி வரால் மீனைக் கவரச் சென்று தன் வாயில் முன்பு பற்றி இருந்த தசைத் துண்டத்தையும் இழந்தது போல், கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பினதாகிய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத் திருவுளம் கொண்டு அருளுவார்.
274 | புள்ளலைத் துண்ட வோட்டி |
4.027.6 |
புலால்நாற்றத்தால் நெருங்கிவரும் பருந்துகளை விரட்டி மண்டையோட்டிற் பிச்சை எடுத்து உண்டு சென்று, வெப்பத்தாற் பலாசமரங்களின் சிறுகிளைகள் பட்டுப் போகும் சுடுகாட்டின் வெள்ளிய சாம்பலைப் பூசியவராய், அழகிய வெள்ளிய காளைமீது துள்ளி ஏறி அதனைச் செலுத்துபவராய தம்மை, இவ்வுலகிலே பல காலமாகத் தொடர்ந்து பற்றிக் கிடக்கும் அடியேனைப் பிறவிப் பிணியாகிய சேற்றைத் தாண்டச்செய்து அடிமை கொள்பவராய் உள்ளவர் அதிகை வீரட்டனாரே.
275 | நீறிட்ட நுதலர் வேலை |
4.027.7 |
அதிகை வீரட்டனார் நெற்றியில் நீறுபூசி, நீல கண்டராய், பார்வதிபாகராய், நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் உரைப்பவராய், பிறையைச்சூடி, மேல்நோக்கி உயரும் சடையிலே கங்கையை அடக்கிச் சடையை முடிப்பவர் ஆவார்.
276 | காணிலார் கருத்தில் வாரார் |
4.027.8 |
ஆணும் பெண்ணும் அல்லாதாராகிய அதிகை வீரட்டனார் பிறர்காட்சிக்கு அரியராய், கருத்திற்கும் எட்டாதவராய்; திருத்துவதற்கு இயலாதவராய், தம்மோடு பொருந்தச் செய்வதற்கும் இயலாதவராய், இந்நிலை என்று குறிப்பிடத்தக்க எந்த நிலையும் இல்லாதவராய், இறப்பும் பிறப்பும் அற்றவராய், இவர் நமக்கு உற்றவர் அல்லர் என்று துறக்க முடியாதவராய், உலகியலுக்கு மாறுபட்டதம் நிலைகளைக் குறித்துச் சிறிதும் நாணுதல் இல்லாதவராய், ஐம்பொறிகளோடு கலந்து தடுமாறுமாறு அடியேனை இவ்வுலகில்தங்க வைத்துள்ளார்.
277 | தீர்த்தமா மலையை நோக்கிச் |
4.027.9 |
அதிகை வீரட்டனார், தூயதான கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையைஉடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில்பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச்சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து,ஒரு கணத்தில், மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தஅவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.027.திருவதிகைவீரட்டானம் , னாரே, அதிகை, வீரட்டனார், ரட்ட, உடைய, கெடில, கிடந்த, திருமுறை, திருவதிகைவீரட்டானம், கொண்டு, வரால், வயல்கள், சென்று, வெள்ளிய, இல்லாதவராய், இயலாதவராய், துறக்க, அவன், மீது, தேவாரப், பதிகங்கள், பிறையைச், வேலி, திருச்சிற்றம்பலம், நான்காம், எரித்து