நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.028.திருவதிகைவீரட்டானம்

4.028.திருவதிகைவீரட்டானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
278 | முன்பெலா மிளைய காலம் |
4.028.1 |
அதிகைப் பெருமானாரே, உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய், அடியேனுடைய இளமைக்காலமான அம்முற்பட்ட காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து, மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவசிந்தனையே இல்லாது, பயனுடைய செயல்கள் செய்யாமல், உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன். உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன்.
279 | கறைப்பெருங் கண்டத் தானே |
4.028.2 |
அதிகைப் பெருமானாரே! பெரிய நீலகண்டரே! பிறைசூடீ, தலைக்கோலம் அணிந்தவரே! உயிர்களைக் கோபித்துக் கவரும் காலனுக்குப் பயந்து கடல் நீரில் தீர்த்தமாடியும் நீண்ட மலை உச்சியை அடைந்து அங்த்தவம் செய்தும் பிறப்பு, பிறப்பச்சம் என்ற இவற்றை நீக்கிக் கொள்வதற்குரிய வழியினை அறிந்தேன் அல்லேன்.
280 | நாதனா ரென்ன நாளு ஏதங்க ளறிய மாட்டா ஆதனா னவனென் றெள்கி பாதநான் பரவா துய்க்கும் |
4.028.3 |
சான்றோர்கள் யாரேனும் தம்மைத் தலைவர் என்று குறிப்பிட்டால் அதைக் கேட்டு எம்பெருமானாருடைய அடியவராகிய தமக்கு அடியார் என்ற பெயரைத் தவிரத் தலைவர் என்ற பெயர்ஏலாது என்று நடுங்கித் தம்மைத் தலைவராகக் கருதும் தவறுகளைச் செய்ய அறியாதவராய் யாங்கள் அடியவர்க்கு அடியராய் உங்கள் திருவடிகளை வழிபடுகிறோம் என்று பதில் கூறுவர். ஆனால் அறிவிலியான யானோ என்னைத் என்னைத் தலைவன் என்று நினைத்து உம்மை இகழ்ந்து அதிகை வீரட்டராகிய உம்முடைய திருவடிகளை வழிபடாது உலகியல் தீமைகளிளேயே அடியேனைக் செலுத்தும் பழந்தீவினையாகிய பரிசிலை உடையேன்.
281 | சுடலைசேர் சுண்ண மெய்யர் படலைசே ரலங்கன் மார்பர் மடலைநீர் கிழியவோடி கெடிலவீ ரட்ட மேய |
4.028.4 |
மருத நிலத்தைச் சார்ந்த வயல்களுக்கு அருகே வளர்ந்த தென்னை மட்டைகள் பிளக்குமாறு மோதிப் பரவி அவற்றின் மேல் இரத்தினங்களைச் சிதறுகின்ற கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டத்தில் விரும்பி உறையும் உயர் சடைமுடிப்பெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய உடம்பினராய், வண்டுகள் மொய்க்குமாறு இதழ்கள் விரிந்த கொன்றைப்பூ மாலை சேர்ந்த மார்பினராய்உள்ளார்.
282 | மந்திர முள்ள தாக இந்திரன் வேள்வித் தீயி சிந்திர மாக நோக்கித் கந்திர முரலுஞ் சோலைக் |
4.028.5 |
மந்தர மலையாகிய மந்திரத்தை உள்ளமைத்துக் கொண்டு கடலையே நெய்யாகக்கொண்டு இந்திரன் செய்த பாற்கடல்கடையும் வேள்வித் தீயின் கொழுந்தாக வெளிப்பட்ட விடத்தின் நீலநிறத்தைத் தம்மை நீலகண்டர் ஆக்கும்சித்திரத்திற்கு உரிய பொருளாகக் கருதித் தம்மால் அறிவுறுத்தப்படும் அடியவர்களுக்கு அறிவிப்பதற்காகப் பெருமான் இந்நிலவுலகிற்கு வந்து மேகங்கள் ஒலிக்கும்சோலைகளை உடைய நறுமணங் கமழும் கெடில நதிக்கரையினதாக அதிகை வீரட்டத்து உள்ளார்.
283 | மைஞ்ஞல மனைய கண்ணாள் மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு கிஞ்ஞரங் கேட் டுகந்தார் |
4.028.6 |
அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும், தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதி பாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடல்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த, விழுந்து நசுங்கி வேகம்தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.028.திருவதிகைவீரட்டானம் , ரட்ட, அதிகை, திருமுறை, திருவதிகைவீரட்டானம், திருவடிகளை, கேட்டு, என்னைத், உடைய, கெடில, தலைவர், வேள்வித், பெருமானாரே, பதிகங்கள், தேவாரப், நான்காம், திருச்சிற்றம்பலம், னீரே, செய்யாமல், அதிகைப், தம்மைத்