நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.022.கோயில்

4.022.கோயில்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
218 | செஞ்சடைக் கற்றை முற்றத் நஞ்சடை கண்ட னாரைக் மஞ்சடை சோலைத் தில்லை துஞ்சடை யிருள் கிழியத் |
4.022.1 |
சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.
219 | ஏறனா ரேறு தம்பா ஆறனா ராறு சூடி நாறுபூஞ் சோலைத் தில்லை நீறுமெய் பூசி நின்று |
4.022.2 |
காளையை வாகனமாகவுடையவராய், பிறை ஒளிவீசும் தலையிலே கங்கையாற்றை உடையவராய், கங்கையைச் சூடிக்கொண்டு, பார்வதி ஒருபாகமாக, நறுமணம் கமழும் சோலைகளை உடைய தில்லை நகரிலே தாம் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே உடலில் திருநீறு பூசிக்கொண்டு பலகாலம் ஞானத்தீயிடைக் கூத்தாடுமாற்றைக் காணலாம்.
220 | சடையனார் சாந்த நீற்றர் யுடையனா ருடை தலை(ய்)யி கடிகொள்பூந் தில்லை தன்னுட் அடிகழ லார்க்க நின்று |
4.022.3 |
சடையை உடையவராய்த் திருநீற்றையே சந்தனமாகப் பூசியவராய், ஒரேபிறை ஒளிவீசும் தலையை உடையவராய், மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்பதனை உடையவராய், நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரில் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே, திருவடிகளிலே வீரக்கழல் ஆரவாரம் செய்ய நின்று, ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
221 | பையர வசைத்த வல்குற் மையரிக் கண்ணி யாளும் செய்யரி தில்லை தன்னுட் கையெரி வீசி நின்று |
4.022.4 |
குளிர்ந்த பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய அல்குலை உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
222 | ஓதினார் வேதம் வாயா பூதனார் பூதஞ் சூழப் நாதனார் தில்லை தன்னு காதில்வெண் குழைகள் தாழக் |
4.022.5 |
ஐம்பூதங்களாக இருக்கும் பெருமான், தம் வாயால் வேதம் ஓதினராய்ப் பிறை ஒளிவீசும் சென்னியராய்ப் புலித்தோலை அணிந்தவராய்த் தாம் எல்லோருக்கும் தலைவராய்ப் பூதங்கள் சூழத் தில்லையம்பதியில் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே காதிலணிந்த வெண்குழைகள் தொங்குமாறு ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
223 | ஓருடம் பிருவ ராகி பாரிடம் பாணி செய்யப் காரிடந் தில்லை தன்னுட் பேரிடம் பெருக நின்று |
4.022.6 |
ஒரே உடம்பில்தாமும் பார்வதியுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய், பூதக்கூட்டங்கள் தாளம் போட, கூத்தாடுதலின் பழகிய எம் மேம்பட்ட பெருமான், மேகங்கள் தங்கும் தில்லையிலே சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே அகண்டமாய் வளருமாறு நின்று, விளங்குகின்ற ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
224 | முதற்றனிச் சடையை மூழ்க மதக்களிற் றுரிவை போர்த்த மதர்த்துவண் டறையுஞ் சோலை கதத்ததோ ரரவ மாடக் |
4.022.7 |
முதன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடையசடைமுழுதும் பிறை தன் ஒளியைப் பரப்பும் சென்னியை ய், மதம் பொருந்திய யானையை கொன்று அதன் தோலைப் போர்த்திய வலிமை உடையவராய், தேன் உண்டு களித்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நிறைந்த சிற்றம்பலத்தில் கோபம் கொண்ட பாம்பு படமெடுத்து ஆடச் சிவபெருமான் ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
225 | மறையனார் மழுவொன் றேந்தி இறைவனா ரெம்பி ரானா சிறைகொணீர்த் தில்லை தன்னுட் அறைகழ லார்க்க நின்று |
4.022.8 |
வேதம் ஓதுபவராய், மழுப்படை ஒன்றை ஏந்தியவராய், அழகிய பிறை நிலவொளி வீசும் சென்னியராய், எல்லோர் உள்ளத்தும் தங்கியிருப்பவராய், எங்கள் தலைவராய், தம்மைத் துதிப்பவர்களுடைய துயரங்களை நீக்குபவராய், நீர்ப் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே விளங்குகின்ற சிற்றம்பலத்திலே, சிவபெருமான் தம் கழல் ஒலி செய்ய நின்று ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.
226 | விருத்தனாய்ப் பால னாகி நிருத்தனார் நிருத்தஞ் செய்ய கருத்தனார் தில்லை தன்னுட் அருத்தமா மேனி தன்னோ |
4.022.9 |
ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம்பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத் தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.
227 | பாலனாய் விருத்த னாகிப் காலனைக் காலாற் காய்ந்த ஞாலமாந் தில்லை தன்னுள் நீலஞ்சேர் கண்ட னார்தா |
4.022.10 |
பாலனாகவும் மூத்தோனாகவும் காட்சி வழங்கிக் குளிர்ந்த பிறை ஒளிவீசும் சென்னியராய்க் காலனை காலான் வெகுண்ட பெருமானார் காளையை இவர்ந்து உலகவர் கூடி வணங்கும் தில்லையம்பதியில் சிறப்பாகப் போற்றப்படும் சிற்றம்பலத்திலே நீலகண்டராய் விரிவாக ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.
228 | மதியிலா வரக்க னோடி நெதியன்றோ ணெரிய வூன்றி மதியந்தோய் தில்லை தன்னுள் அதிசயம் போல நின்று |
4.022.11 |
அறிவற்ற அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.022.கோயில் , ஒளிவீசும், யாடு, காணலாம், றம்ப, மாறே, தில்லை, கூத்து, வெறிக்குஞ், சிற்றம்பலத்திலே, ஞானத், பிறை, தீயிடையே, நிகழ்த்துமாற்றைக், சிவபெருமான், உடைய, நின்று, உடையவராய், திருமுறை, காட்சியைக், தில்லையம்பதியிலே, வேதம், சிறப்பாகக், நின்றுவனலெரி, தன்னுட்கருதுசிற், பழகிய, கோயில், விளங்குகின்ற, நிகழ்த்தும், கமழும், பெருமான், தில்லையம்பதியில், தேவாரப், விளங்கும், குளிர்ந்த, வீசும், சென்னியராய், பதிகங்கள், பரப்பும், நான்காம், தீயிடைக், பொழில்கள், நீண்ட, சென்னியராய்க், தன்னுட்டிகழ்ந்தசிற், தங்கியிருப்பவராய், காட்சி, ஒளியைப், சோலைத், பலகாலும், சோலைகளை, பிச்சை, தாம், கையில், தலையிலே, ஒருபாகமாக, நறுமணம், லார்க்க, தேன், சிவந்த, காளையை, கண்ட, செய்ய, கருதப்படும், சடையை, நிறைந்த, பொருந்திய, திருச்சிற்றம்பலம்