நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.106.திருப்புகலூர்

4.106.திருப்புகலூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1009 | தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் |
4.106.1 |
புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.
1010 | பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் |
4.106.2 |
பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
1011 | பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக மன்னுள தேவர்கள் தேடு மருந்தே என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் உன்னள வேயெனக் கொன்று மிரங்காத |
4.106.4 |
பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப்பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவா உளர்?
1012 | ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை காணப் பராவியுங் காண்கின் றிலர்கர தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை கோணப் பிரானைக் குறுகக் குறுகா |
4.106.10 |
திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.106.திருப்புகலூர் , உடைய, திருமுறை, திருப்புகலூர், உறையும், வகுத்தன்ன, பிரானை, வேறு, பொன்னை, தேவர்கள், மேம்பட்ட, அவன், தேவாரப், நான்காம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், திருவடிகளை, புன்னை, அளவில்