நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.107.திருக்கழிப்பாலை

4.107.திருக்கழிப்பாலை
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
1013 | நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம் |
4.107.1 |
நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப்பாலையில் உறைபவனே! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம். தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ?
1014 | பருமா மணியும் பவளமுத் தும்பரந் பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பெருமா வைனென்னை யாளுடை யானிப் |
4.107.2 |
மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன், எந்தை பெருமான் ஆகிய நீலகண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான்.
1015 | நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் |
4.107.3 |
இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம், குளிர்ந்த நீர் நிலைகளையும், தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.107.திருக்கழிப்பாலை , திருமுறை, திருக்கழிப்பாலை, அருகே, தாமரைப், குளிர்ந்த, அழகிய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப்