2. தேவேந்திர சங்க வகுப்பு - திருவகுப்பு
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானாந்தன தந்தன தானாந்தன தந்தன |
|
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி |
1 |
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை |
2 |
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை |
3 |
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி |
4 |
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் |
5 |
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் |
6 |
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை |
7 |
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி |
8 |
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் |
9 |
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் |
10 |
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு |
11 |
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் |
12 |
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் |
13 |
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள் தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் |
14 |
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் |
15 |
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே |
16 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. தேவேந்திர சங்க வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் -