பாடல் 993 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - .¡வேரி
தாளம் - அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2
தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன ...... தந்ததான |
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி யோக மற்றுழல் ஆசாப சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகீத நாடனை பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில் பாடு பட்டலை மாகோப லோபனை வீடு பட்டழி கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ ஆதி சற்குண சீலா நமோநம ஆட கத்திரி சூலா நமோநம ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை ஆன வர்க்கினி யானே நமோநம ஞான முத்தமிழ் தேனே நமோநம ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும் தோதி தித்திமி தீதா நமோநம வேத சித்திர ரூபா நமோநம சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச தூத னைத்துகை பாதா நமோநம நாத சற்குரு நாதா நமோநம ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 993 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, தானா, தத்தன, முத்தமிழ், தனாதன, என்னை, பெரிய, உடைய, நாதனே, திரியும், வல்ல, தித்திமி, தேனே, யானே, தோதி, தகதிமி, தீதா, சற்குரு