பாடல் 991 - விசுவை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான |
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து முடிமலர் கொண்டொ ...... ரழகாகச் செயவரு துங்க முகமும்வி ளங்க முலைகள்கு லுங்க ...... வருமோக அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து அறிவுமெ லிந்து ...... தளராதே அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு னடியிணை யன்பொ ...... டருள்வாயே வரையைமு னிந்து விழவெக டிந்து வடிவெலெ றிந்த ...... திறலோனே மதுரித செஞ்சொல் குறமட மங்கை நகிலது பொங்க ...... வரும்வேலா விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த விடையரர் தந்த ...... முருகோனே விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு விசுவைவி ளங்கு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 991 - விசுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதன, வருகின்ற, மணம், மார்பகங்கள், கொன்றை, றிந்த, பெருமாளே