பாடல் 990 - வாகைமாநகர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தான தனத்த, தான தான தனத்த தான தான தனத்த ...... தனதான |
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு மால கால விழிக்கு ...... முறுகாதல் ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு மார பார முலைக்கு ...... மழகான ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காத லளிக்கு ...... முகமாய மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயி லூறல் குடித்து ...... மயல்தீர வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற வாகை மாந கர்பற்று ...... பெருமாளே. |
* நீடு கோலம் - வேட்டுவனாக, வேங்கையாக, வளைச் செட்டியாக, விருத்தனாக, இறுதியில் தெய்வமாகக் கோலங்கள் காட்டியதைக் குறிக்கிறது).
** வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 990 - வாகைமாநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அந்த, தனத்த, வாகை, மோகம், பொருந்திய, மேவு, விற்கும், வள்ளியின், அழகிய, கொண்ட, நீடு, வேடர், மாலை, லூறல், பெருமாளே, வேலை