பாடல் 989 - முள்வாய் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த தன்னா தனந்த தந்த ...... தனதான |
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன் பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப் பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற் பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே. |
* முள்வாய் ஆந்திராவில் உள்ள சித்தூர் நகரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 989 - முள்வாய் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தன்னா, உள்ள, நின்று, தந்த, தனந்த, அவர்களுக்கு, தெரிந்து, கொண்டு, போர், என்னும், உயிர், வணங்கி, பெருமாளே, சதங்கை, ழன்று, தண்டை, பன்னா, முள்வாய், சென்று