பாடல் 982 - உத்தரகோசமங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான |
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத் திற்புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் கட்டிள நீர்முக் கனிபய றம்பொற் றொப்பையி னேறிட் டருளிய தந்திக் கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப் பொற்சரி நாதப் பரிபுர என்றுப் பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான் பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற் றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற் றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற் குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக் கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித் திக்கய மாடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு வென்கச் செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி உற்பன மாகத் தடிபடு சம்பத் தற்புத மாகத் தமரர்பு ரம்பெற் றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா உட்பொருள் ஞானக் குறமக ளும்பற் சித்திரை நீடப் பரிமயில் முன்பெற் றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே. |
* அஷ்ட திக்கஜங்கள்:ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் என்பன.
** உத்தரகோசமங்கை ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 982 - உத்தரகோசமங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானத், அழகிய, பெற்று, உள்ள, தந்தத், தனதன, உடைய, அஷ்ட, போலவும், தேன், எட்டுத், வென்கச், ஞானக், கற்பக, ஞானப், ளாகத், மாகத், தடுடுடு, பெருமாளே